Monday 31 August 2020

கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் சிறப்பு பதிவு....

 கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் சிறப்பு பதிவு....

கவியரசர் கண்ணதாசன் அவர்கள்
என். எஸ். கிருஷ்ணன் அவர்களின்
மறைவுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி.
அந்தக் கவிதையின் தலைப்பு....
'ஆறாது ஆறாது அழுதாலும் தீரோது'
விந்த்யக் கோடும் பொய்யே
விரிகடல் அலையும் பொய்யே
சந்திரன் எழிலும் பொய்யே!
தாரகை ஒளியும் பொய்யே! தென்தினசைத் தமிழும் பொய்யே! தென்றலும் பொய்யே! காதல் மந்திரம் பொழியும் மாதர் மயக்கவும்
பொய்யிற் பொய்யே
இப்பொழு திருந்தான் அண்ணன்
இன்று நான் பார்த்தேன்!
காலை துப்புர வெளுக்கும் போழ்தும்
தூங்கினான்; கண்டேன்!
கொஞ்சம் அப்படி நகர்ந்தேன்;
மீண்டும் அருகினில் வந்தேன்!
ஐயோ எப்படிச் சொல்வேன்! அண்ணன் இல்லையே
இல்லை! இல்லை!
கருணையும் மறையுமென்றால் காலமோர் உண்மையாமோ? பொறுமையும் அழியுமாயின்
பூதலம் உறுதியாமோ
வருவதை வரி வாரி வழங்கிடும்
அண்ணன் மேனி எரிதழ்ல்
படுவ காண்போர் இப்புவி
நிலையென் பாரோ? மாந்திய வயிற்றின் சோகம்
மாற்றவே பொருளென் பானே
ஈந்ததாற் சிவந்த கையை
இளையதா மரைஎன் பானே! மாந்தருக் குழைப்ப தொன்றே மகிழ்ச்சியின் தாயென் பானே! மாந்தளிர் நகையை என்றும்
மறக்கிலான் போயி னானே
இறந்தினன் எனநி னைக்க
இரும்பினால் நெஞ்சம் வேண்டும்
வருந்துவர் வருத்தம் நீக்க மறைந்தவன்
வரத்தான் வேண்டும் அருந்தமிழ்
ஆற்றல் கொண்டே ஆயிரம் துயரம்
தீர்ப்பார் இறந்தஎன் அண்ணன் தந்த
இத்துயர் தீர்ப்பா ரல்லர்!
நள்ளிராப் போழ்தில் ஓர்நாள் 'நட' என்றான் எங்கே' என்றேன் கள்ளரும் துயிலும் வேளை கடற்கரை'க் கென்றான் சென்றோம்
உள்ளூறும் மணற் பாங் கின்மேல் ஓய்வுற அமர்ந்தோம்
அண்ணன் வெள்ளிய மனத்தை
ஆங்கே விரித்தனன்; கதைகள்
சொன்னான் 'சிறுவயதிலிருந்து
தன்னைச் சிதைத்ததோர் வறுமை
சொன்னான் வருவது வரட்டும் என்றே
வாழ்ந்ததோர் பொறுமை சொன்னான்
பெரும்புகழ் பெறுவதாலே பெற்றதோர்
மகிழ்வும் சொன்னான் இருப்பினும்
அமைதி மட்டும் இல்லையே தம்பி
என்றான்
மனத்தினைக்குடையும் துன்பும்
மாற்றுவ தெவ்வா' றென்றான்
கனத்தினைத் தூக்கி இந்தக் கடலிலே
வீசும்' என்றேன். நினைத்ததை
முடிக்கும் நெஞ்சன் நிமிர்ந்தனன்
தம்பி! உள்ளீற் கனப்பது மானம்
என்றான்
கலங்கினேன்! பதிலா சொல்வேன்
இழையுமத் துயர்ம் கூறி இது மட்டும்
இல்லை யென்றால் மழையெனப்
பொழிவேன்; வாரி வழங்குவேன்
சம்பாதிப்பேன்! கழையிலும் ஏறி
வித்தை காட்டுவேன்!
புதிய எண்ணம் தழைப்பதை வீசி வீசித் தமிழையும் காப்பேன்' என்றான்
இதுவரை யாருக் கேனும் இடர்கள்
நான் செய்தே னில்லை
சதிபுரிந் தொருவர் செல்வம் சற்றுமே
கொண்டேனில்லை!
கதியிலார்க் குதவ லின்றிக் கைப்பொருள் காத்தே னில்லை! மதிவழி வாழ்ந்தேன் அந்தோ! மன்த்துயர் தவிர்த்தே னில்லை! அண்ண(ன்) இவ்வாறு சொன்னான்!
அருவி போல் கண்ணீர்
சிந்தி மண்ணிடை வடித்தேன்! ஐயோ
மண்டிய கொடுமைக் காடே
புண்ணியா நெறியில்லாத
புன்மைசேர் காலக் கூத்தே! அண்ணனைக் கொன்றாய்!
எங்கள் அமைதியைக்
கொன்றாய்! கொன்றாய்!
இறந்தபின் முகத்தைப் பார்த்தேன்! எழில்டா எழிலின் தேக்கம்!
பொருந்திய அமைதியர்லே
புன்னகை பொழிந்தான் அண்ணன்! நெருங்கிய கூட்டம் மோதி
நேயனின் முகத்தைப் பார்த்து
வருந்திய வகையைக் கூற
வார்த்தைதான் தமிழில் இல்லை
பூனையும் கிளியும் தேம்பிப் பொறுமிய
தாகக் கூறும் பாநயம் படித்தா ரன்றிப்
பார்த்தவர் இலவே இல்லை! பூனையா
சென்னை மண்ணின் புல்ல்லாம்
விம்மி விம்மி கூனிய துயரம்
கண்டோம்! கூவிய குரலும் கேட்டோம்
எத்தனை தாய்மார்! ஏழை எளியவர்
புல்வர்! வீரர்! கத்திடும் கடலும்
தோற்கும்! காவிரி நீரும் ஓயும்
சித்தனே! இனிமேல் இந்தச்
செகத்தையார் காப்பார் என்றே
அத்தனை பேரும் சொன்னார்
அழுகுரல் நகரம் முற்றும்!
வாரிய கைக ளைத்தீ வாயினால் அவித்தோம்
இன்பம் கூறிய வாயில் கொண்டே
அரிசியைக் குவித்தோம்! அன்பில்
சீரிய கண்கள் மூடிச் சிதையிடை
வைத்தோம்! சாவில் தேறிய இதயன்
தன்னைத் தீயடா, தீயில் நீத்தோம்
தப்பியே பிறந்த நெஞ்சம்
தாய்நெஞ்ச்ம்! பிள்ளை நெஞ்சம்
செப்பரும் கொடையின் நெஞ்சம்
தேனிலே தோய்ந்த நெஞ்சம்
ஒப்பில்லா மணியாம் எங்கள்
உயர்கலை வாணர் நெஞ்சம் இப்புவி
உளநாள் மட்டும் இனிப்பிறர் காணா
நெஞ்சம்! அருகிலே இருந்த காலம்
அலையென மோதி மோதி உருகிஎன்
மனத்தை வாட்டி உருக்குலைக் கின்ற
தையோ! கருகிய சடலத்தோடு
கலந்துநான் சென்றி டாமல்
இருப்பதேன், கடின் நெஞ்சம்
என்நெஞ்சம்! பாவி நெஞ்சம்!
நன்றி முருகேஷ் பாலச்சந்தர்

No comments:

Post a Comment