Thursday 13 August 2020

நிரந்தரமாக மகிழ்ச்சி எப்போது கிடைக்கும்?

 நிரந்தரமாக மகிழ்ச்சி எப்போது கிடைக்கும்?

ஒரு விறகுவெட்டி தினமும் காட்டிற்கு சென்று போதுமான அளவு விறகு வெட்டி விற்பனை செய்து ஓரளவு திருப்திகரமாக வாழ்ந்து வந்தான். அன்று அவன் காட்டிற்கு சொல்லும்போது ஒரு துறவி ஒருவர் சாந்தமாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். விறகு வெட்டிக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை தனது வருமானத்தை மேலும் அதிக அளவில் பெருக்க வேண்டும் என்ற ஆசை அதை அந்தத் துறவியிடமே அதற்கான ஆலோசனைகளை கேட்டு விடுவோம் என்று துறவியிடம் வந்து வணங்கி நின்றான்.
தேஜஸ் நிறைந்த முகத்துடன் இருந்த துறவி விறகுவெட்டியை பார்த்தார். ஐயா வணக்கம் நான் ஒரு விறகுவெட்டி போதுமான அளவு வருமானம் வருகிறது இருப்பினும் இன்னும் அதிக வருமானம் வந்தால் நான் சற்று சிறப்பாக வாழ்வேன் அதற்கு ஏதேனும் வழி சொல்லுங்கள் என்று பணிவுடன் கூறினான். காட்டுக்கு உள்ளே நீ வழக்கமாக போகும் இடத்திலிருந்து இன்னும் சற்று உள்ளே போ. அங்கு நிறைய விலை மதிப்பான மரங்கள் இருக்கின்றன அவைகள் போதுமானதாக இருக்கும் என்று கூறி அனுப்பினார். அவனும் சென்றான் உள்ளே தேக்கு மரங்கள் இருந்தன அவற்றை வெட்டி விற்றான்.
மறுநாளும் இதே போல் அந்த துறவியைப் பார்த்து நின்றான். துறவியும் காட்டில் மேலும் உள்ளே போ உனக்கு தேவையானவை கிடைக்கும் என்றார். அவனும் அதே போல் இன்னும் நீண்ட தூரம் உள்ளே சென்றான் , சந்தன மரங்கள் கிடைத்தன அவற்றை வெட்டி விற்று சில நாட்கள் கழித்து மறுபடியும் துறவி வந்து வணங்கி நின்றான்.
அவரும் அதே போல் இன்னும் உள்ளே போ அதைவிட அதிகமான செல்வம் கிடைக்கும் என்றார்.
அவன் காட்டின் உள்ளே மேலும் சென்றான் உள்ளே ஒரு வைரச் சுரங்கமே இருந்தது அதையும் எடுத்து வந்துவிட்டான் மறுபடியும் துறவியிடம் வந்து நின்றான். என்னப்பா இன்னும் உனக்கு அதிக செல்வம் வேண்டுமா என்றார். இல்லை சாமி இவ்வளவு செல்வம் இருக்கும் இடம் அனைத்தும் உங்களுக்கு தெரிந்தும் நீங்கள் ஏன் அதை எடுத்துக் கொள்ளவில்லை. அதை வைத்து நீங்கள் வசதியாக வாழ்ந்து இருக்கலாமே? என்று கேட்டான்.
அதற்கு துறவி பதிலளித்தார், “உங்களுக்கு கிடைத்த பொக்கிஷங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உங்களை திருப்திப்படுத்தும். நீங்கள் நிரந்திரமாக மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், நான் செய்வது போல் அமைதியாக அமர்ந்து மனதினுள் உள்நோக்கி பயணம் செய்ய வேண்டும். மகிழ்ச்சியை பெறுவது என்பது பேராசையுடன் பொன், பொருளுக்கு பின் ஓடுவது அல்ல, மாறாக நம் ஆசைகளை மேலும் மேலும் குறைப்பதன் மூலம் பெறலாம். ஆனந்தத்தின் இந்த உயர்ந்த வடிவம் யோகாவில் *‘சமாதிநிலை'* என்று அழைக்கப்படுகிறது. சுவாமி
சிவானந்தா ‘சமாதி’ ஒரு ஆசையற்ற மேடை என்று வர்ணிக்கிறார். ஆசை இல்லாதபோது பேரின்பம் வரும்.
Saravanan and 1 other

No comments:

Post a Comment