Friday 28 August 2020

பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும்.

 பண்பான வார்த்தைகள்

இதயத்தைத் தொடும்.
இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy) ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.அவருக்கு எதிரே வந்தார் ஒரு பிச்சைக்காரர்.
அவர் அய்யா,'' எதாவது உதவி செய்யுங்கள்,உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது'' என்று கூறினார்
ஆனால் அப்போது அவரிடமோ சோதனையாக ஒரு காசு கூட இல்லை. உடனே அவரைப் பார்த்து மிகவும் கனிவான குரலில்,
அன்பு சகோதரனே, ''உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே என்றார்''...
அவரது வார்த்தையை கேட்ட பிச்சைக்காரர் அவர் மேல் கோபம் கொள்ளவும் இல்லை. தன் நிலையை எண்ணி நொந்து கொள்ளவும் இல்லை.
அதற்கு மாறாக முக மலர்ச்சியோடு, நன்றி ஐயா, தாங்கள் போய் வாருங்கள் என்றான்.
அவரது முகப் பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், "நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய வில்லை.ஆனால், நீங்கள் மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறீர்களே?எதற்காக என்று அவரிடம் வியப்பாக கேட்டார்.
ஐயா,''நான்இதுநாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக நினைத்து விரட்டி இருக்கிறார்கள்..
நீங்கள் ஒருவர்தான் என்னை பாசத்தோடு சகோதரனே என்று சொல்லி அன்போடு அழைத்து பரிவாகப் பேசி இருக்கிறீர்கள்.
அந்த அன்பு ஒன்றே போதும்.நீங்கள் என் மீது காட்டிய
இரக்கம் ஒன்றே போதும்,வேறு எந்த உதவிகள் எனக்குத் தேவை இல்லை அய்யா, என்று மனம் உருகி சொன்னான்.
ஒரு யுத்தத்தை வார்த்தைகளால் தொடங்க முடியும். முடித்து வைக்கவும் முடியும். சில வார்த்தைகள் கசக்கும். சில வார்த்தைகள் இனிக்கும்.
பண்பான வார்த்தைகள் இதயத்தைத் தொடும்.

No comments:

Post a Comment