Monday 31 August 2020

வெற்றியடைய ஒரே ஒரு தகுதி மட்டும் போதும். அது என்ன தகுதி

 வெற்றியடைய ஒரே ஒரு தகுதி மட்டும் போதும். அது என்ன தகுதி

அவர் 65 வயதான முதியவர். அந்த தள்ளாத வயதிலும் பல உணவகங்களுக்கு சென்று தன் புது வகையான உணவு கண்டுபிடிப்பை வியாபாரபடுத்த முயல்கிறார். (சிறு வயதில் தாய் தந்தையை இழந்து உறவினர் வீட்டில் வளர்ந்தவர். வீட்டில் ஏழ்மை.) அவர் முயற்சியை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற வருத்தத்துடன் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அவர் கைகளில் இரண்டு குக்கர்கள், மாவு மற்றும் மசாலாக்கள் மட்டும் இருந்தன.
ஒருவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உடன் கடைசியாக ஒரு ஒப்பந்தத்தை கூறுகிறார் தனக்கு இதன்மூலம் ஒரு ரூபாய் கூட லாபம் வேண்டாம். தன்னுடைய உணவு கண்டுபிடிப்பை விற்பனை செய்து அது பிரபலமானால் மட்டும் போதும் ஒரு ரூபாய் கூட கூலி வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறார். 1009 உணவகங்கள் அவர் கோரிக்கையையும் அவர் கண்டுபிடிப்பையும் நிராகரிக்கின்றன. கடைசியில் 1010 வது உணவுக் கூடத்தில் அவருடைய புதிய முறையை முயற்சிப்பதாக கூறி ஏற்றுக் கொள்கிறார்கள்.
அன்று ஆரம்பித்த அவருடைய *வெற்றி பயணம்* இன்று அவர் நாட்டில் மட்டுமல்ல உலகின் மூலைமுடுக்கெல்லாம் அவர் நிறுவனம் வெற்றிகரமாக காலூன்றி நடந்து வருகிறது. 65 வயதில் தன் முதல் வெற்றியை பெற்ற அந்த மனிதரின் பெயர் *Colonel Harland Sanders*.
அவர் உருவாக்கிய நிறுவனம் *KFC* (Kentucky Fried Chicken).
உலகில் வெற்றி பெற்ற அனைவரும் ஒரு பக்கம்தோல்வி அடைந்த அனைவரும் ஒரு பக்கம் ,தராசில் வைத்து நிறுத்துப்பார்ப்போம்.
பணக்காரனும் தோற்று இருக்கிறான் ,ஏழையும் வென்றிருக்கிறான்
எனவே, பணம் தடை இல்லை
படித்தவனும் தோற்றிருக்கிறான் , பாமரனும் வென்றிருக்கிறான்
எனவே, படிப்பு தடை இல்லை
வீரனும் தோற்று இருக்கிறான் , கோழையும் வென்று இருக்கிறான்
எனவே பலம் தடை இல்லை
புத்திசாலியும் தோற்று இருக்கிறான், மகரயாழ் முட்டாளும் வென்று இருக்கிறான்
எனவே அறிவு தடை இல்லை
ஆற்றல் படைத்தவனும் தோற்று இருக்கிறான் ,ஊனம் உடையவனும் வென்று இருக்கிறான்
எல்லாம் இருந்தும் தோற்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்
எதுவும் இல்லாமல் வென்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்
ஒன்று மட்டும் தான் இவர்களை பிரித்து காட்டுகிறது ,அது மட்டும் தான் வெற்றியை பெற்றுத்தருகிறது
*அது நம்பிக்கை, தன்னம்பிக்கை*
தோற்றுப்போன எவரிடமும் இல்லாத ஒன்று நம்பிக்கை
வெற்றி அடைந்த அனைவரிடமும் இருந்த ஒன்றே ஒன்று நம்பிக்கை
அந்த நம்பிக்கை மட்டும் இருந்தால் அது எல்லாவற்றையும் பெற்றுத்தரும்
வெற்றியை அது மட்டுமே பெற்றுத்தரும்
நீங்களும் வெற்றி அடைவீர்கள் , நம்பிக்கையோடு இருங்கள்.
1

No comments:

Post a Comment