Tuesday 18 August 2020

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

 ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பேஸ்புக் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ராகுல் காந்தி ஒரு பத்திரிகை செய்தியை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறி இருந்ததாவது:
''இந்தியாவில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது
ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன'' என்று பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில் ''தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட கட்டுப்படுத்த முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர்'' என கூறியிருந்தார்.
இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து பேஸ்புக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியள்ளதாவது:
''யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ, அதிகாரத்தையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல் பேஸ்புக் பாரபட்சமின்றி செயல்படுகிறது. எந்த காரணத்திற்காகவும் நிறுவனத்தின் கொள்கைகளை கைவிடவில்லை.' ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு ஆதாரம் அற்றது.அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளது.
மேலும்,வன்முறையை தூண்டும் வகையிலான வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அதிகாரம், கட்சி சார்பு பற்றி கவலையின்றி உலக அளவில், எங்களது கொள்கைகளை நாங்கள் திடமாக அமல்படுத்துகிறோம்' என்று தெரிவித்து ராகுல் காந்தியின் முட்டாள்தனத்தை உலகம் முழுவதும் அம்பலப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment