Tuesday 10 October 2023

மெளனமும் அறிவும்

 மெளனமும் அறிவும் . .

*தேவையில்லாத இடங்களில்
நம் அறிவைக் காட்டத் துணிந்தால் நமக்குத் தான் நஷ்டம் ஏற்படும்.*
ஒரு ரசாயன விஞ்ஞானி,
ஒரு உயிரியல் நிபுணர்,
ஒரு மின்சாரப் பொறியாளர்
மூவருக்கும் மின்சார இருக்கையில் இருத்தி சாகடிக்கத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பை நிறைவேற்றுபவன்
ரசாயன விஞ்ஞானியிடம் வந்து "உங்களுக்கு ஏதேனும் கூற விருப்பமா." என்று கேட்டான்.
அவர் "இல்லை." என்றார்.
இருக்கையில் அமர்த்தி சுவிச்சை அழுத்தினான்.
மின்சார நாற்காலி வேலை செய்யவில்லை.
தண்டனையை ஒரு தடவை நிறைவேற்ற முடியாவிட்டால்
விடுதலை செய்ய வேண்டுமென்று அந்த நாட்டில் சட்டம்.
அதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து உயிரியல் நிபுணர் அமர்த்தப்பட்டார்.
அப்போதும் நாற்காலி வேலை செய்யவில்லை.
அவரும் விடுவிக்கப்பட்டார்.
அடுத்து மின்சாரப் பொறியாளர் அமர்த்தப்பட்டார்.
அவரிடம் "உங்களுக்கு ஏதேனும் கூறுவதற்கு உள்ளதா.."
என்று கேட்கப்பட்டது.
"ஆமாம்." என்ற அவர்,
"அந்த நீல நிற ஒயரையும் சிகப்பு நிற ஒயரையும் இணைத்தால்
நாற்காலி வேலை செய்யும்."
என்று சொன்னார்.
உடல் கருகி இறந்தார் .
உண்மையைக் கூறக்கூடாத இடத்தில் கூறியதால் அவர் உயிரிழந்தார்.
சில நேரங்களில் நமக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் மௌனமாயிருப்பதே நல்லது.
*நம்மிடம் இருக்கும்
இரண்டு நிலைகளை
இழந்து விட்ட
பின்பு தான் நாம் அதன் மதிப்பை உணர்ந்து கொள்கிறோம்.*
*ஒன்று ஆரோக்கியம்.*
*மற்றொன்று இளமை.*
*எல்லா கல்லையுமா
கருவறைக்குள் ஏற்ற முடியும், அதேபோல தான் வாழ்கையில் ஜெயுச்சவங்களும்.*
*சில கற்கள் செதுக்க முயற்சிக்கும் போதே வலி தாங்க முடியாமல் தன் தகுதியினைக் குறைத்துக் கொள்கின்றன.*
*உங்களை நீங்களே
வீண் என நினைத்தால்
விடியல் கிடையாது.*
*நீங்களே உலகிற்குத் தூண்
என நினைத்தால்
உங்கள் வாழ்வில் இருளே கிடையாது.*

No comments:

Post a Comment