Thursday 26 October 2023

நிம்மதி அமைதி .

 நிம்மதி அமைதி . .

*வாழ்க்கைப் பாதையில்
வருகின்ற வெற்றியும்
தோல்வியும்
நீங்களே தேடியவை தான்.*
*நதி எப்படி தன் பாதையை
உருவாக்கி ஓடுகிறது
அது போலத் தான்.*
*நாம் செய்யும் நல் வினையும்
தீ வினையும் தான்
பாதையைத் தருகிறது.*
*தீதும் நன்றும் பிறர் தர வாரா. *
*இருக்கின்ற காலத்தில்,
நல்லதை மட்டுமே
செயலாக்கினால்
வெற்றி நிச்சயம். *
*எந்தப் பிரச்சனையும்
நிரந்தரமில்லை
என்ற மனநிலை வந்துட்டாலே
போதும்,
பிரச்சனைக்குத் தீர்வுக்கு
கிடைக்குதோ
இல்லையோ
மனசுக்கு நிம்மதி கிடைக்கும்.*
*எதிரிகளை வீழ்த்த
ஆயுதம் தேவை இல்லை,
மன்னித்துப் பார் அதுவே
மிகச் சிறந்த மரணதண்டனை.*
*வாழ்கையில் யாரும் இல்லையென நினைக்காதே
உன்னோடு உன் தன்னம்பிக்கை உள்ளது.*
*நீந்த முடியாத மீனை
எப்படிக் கடல் கரையில் தள்ளுமோ,
அது போல் தான் விமர்சனம்*.
*விமர்சனம் தாண்டி
உழைக்காத மனிதன்
வெற்றி பெற்றதில்லை.*
*பணம்
பதவி
புகழ்
மட்டுமே வெற்றி இல்லை.
மனதில் மகிழ்ச்சி
நிம்மதி
அமைதி தான்
உண்மையான வெற்றி.*

No comments:

Post a Comment