Wednesday 11 October 2023

இயலாமை .

 இயலாமை .

நாம் எங்கெல்லாம்
இணங்கிச் செல்வது சிறந்தது
என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
*''இணங்குவதால் பிழையில்லை*
*நம்மில் பெரும்பாலானோர் சூழ்நிலைக்கு ஏற்ப இணக்கமாகச் செல்கிறோம்.*
*ஆனால்
எப்போது இணக்கமாகச் செல்ல வேண்டும்.
எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.*
*மற்றவர்களுடன்
இணங்கிப் போவது என்பது ஒருவரின் பண்பினையும், பணிவையும் குறிக்கும்...*
*பணிவு என்பது
சிலரின் கணிப்பில் இயலாமை என்று பிழையான எண்ணங்களைக்
கருத்தில் கொள்ளாதீர்கள்.*
*இணங்கிப் போகிறவர்கள் கோழைகளும் அல்ல.
அஞ்சி நடப்பவர்களும் அல்ல.*
*அவர்கள் அறிவுடன் கூடிய திறமையாளர்கள் இத்தகைய திறமையாளர்கள் எனப் பெயர் வரக் காரணம்*
*இணங்கிப் போகும் அறிவும்,
புலமைக் கூர்மையும்,
திறமையும் தான்
என்பதை யாரும் வலியுறுத்திச்
சொல்ல வேண்டியதில்லை.*
*இருந்தாலும் அனைவருக்கும் பிடித்தாற்போல் இணங்கி வாழ்ந்து வந்தால் சில வேளைகளில் நாம் நம் சுயம் இழப்பது உறுதி.*
*ஓர் உயிருள்ள கிணற்றுத் தவளை , வீட்டின் சமையலறையில், அடுப்பில் பற்ற வைத்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து விட்டது.*
*தண்ணீரின் வெப்பம் கூடக் கூட தவளை தன் உடம்பின் வெப்பநிலையை சூழ்நிலை வெப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்தது.*
*அதன் தன்மை அத்தகையது.
தண்ணீர் அதன் கொதிநிலையை (100℃) அடையும் போது வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முற்பட்டது.*
*ஆனால் முடியவில்லை.
காரணம் உடலின் வெப்ப நிலையை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டே வந்ததால் அது
வலுவிழந்துப் போய் விட்டது.*
*அதுமட்டுமல்ல , பாவம் சிறிது நேரத்தில் அந்தத் தவளையும் இறந்தே போய் விட்டது*
*தவளையைக் கொன்றது எது. எளிதில் கூறி விடலாம் கொதிநீர் தான் தவளையைக் கொன்று விட்டது என்று.*
*ஆனால் உண்மை அதுவல்ல.
எப்போது குதித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத தவளையின் அந்த இயலாமை தான் அதைக் கொன்று விட்டது.*
*இணங்கிப் போகும் ஒருவருக்கு, மற்றவர்களும் இணங்கிப் போவார்கள்.*
*நீங்கள் பிறருக்கு ''இணங்கிப் போவது'' என்கிற பாடத்தை,
கற்பிப்பதில்
முன்னோடியாகத் திகழுங்கள்.*

No comments:

Post a Comment