Friday 20 October 2023

பணமும் குணமும் . .

 பணமும் குணமும் . .

*தவறு செய்பவர்களைத்
திருத்தி விடலாம்*
*அதை
நியாயப்படுத்துபவரை
ஒருபோதும் திருத்தவே முடியாது.*
*தவறை மறந்து விடலாம்
ஏனென்றால் அது தெரியாமல்
செய்வது. ஆனால் துரோகத்தை மன்னிக்க முடியாது.
ஏனென்றால் அது திட்டம் போட்டுச் செய்வது.*
*உணவில்*
உப்பினளவு போல
உள்ளத்தில் எப்பொழுதும்
தானென்ற திமிர் கொள்ளுங்கள்.*
*பல வலிகளிலிருந்து
உங்களைத்
தற்காத்துக் கொள்ள
உதவியாயிருக்கும்.*
*ஆறுதலாய் இல்லாவிட்டாலும்*
*நமக்குத்
துன்பங்களை தராமல்
ஒதுங்குபவரும்*
*நல்ல நண்பர்களே.*
*ஒரு முட்டாளால்
அறிவாளியிடம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது.
ஆனால் ஒரு அறிவாளியால்
முட்டாளிடம் இருந்து
நிறைய கற்றுக்கொள்ள முடியும்.*
*இரண்டு வார்த்தைகளில்
சொல்ல வேண்டிய விஷயத்தை*
*ஒரே வார்த்தையில்
சொல்ல முடிந்தால்*
*அது தான்*
விலைமதிக்க முடியாத திறமை.*
*உயரத்தில்
ஏறி நின்றால்
உலகமே உனக்குத் தெரியும்.*
*ஆனால்*
உயர உயர வளர்ந்தால் மட்டுமே
உலகத்திற்கு நீ தெரிவாய். *
*"சிந்திக்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஆனால், செயல்படும் நேரம் வரும் போது உங்கள் சிந்தனையை நிறுத்தி விடுங்கள்.*
*தானாகத் தன் பிழைகளை
உணராத எவரையும் நாமாகத்
திருத்திவிட முடியாது.*
*அப்படி முயற்சிப்பது கல்லிடம்
கதை சொல்வதற்கு ஒப்பாகும்.*
*பதில்கள் எப்போதும்
வார்த்தைகளாலேயே
நிரப்பப்பட வேண்டும், என
எந்தக் கட்டாயமும் இல்லை.*
*நல்லது நடந்தால் அதை அனுபவியுங்கள்.*
*கெட்டது நடந்தால் அதை அனுபவமாக்குங்கள்.*
*ஒருவருக்கு கிடைக்கும்
சந்தோஷத்தின் பின்னால், நிச்சயமாக இன்னொருவர் தியாகம் அடங்கி இருக்கும்.*
*வெளிச்சம் கிடைத்தவுடன்
திரியின் தியாகம் யாருக்கும் தெரிவதில்லை.*
*தன்னைத் தூற்றித் திரியும்
சில்வண்டுகளுக்கு முன்
சிறுத்தை தன் பலத்தைக்
காட்டாது.*
*அதே போல்*
*எல்லோரிடமும்
நம் தனித்துவத்தையும்,
உண்மைதுவத்தையும்,
நிரூபிக்க வேண்டிய
அவசியம் இல்லை.*
*குணமும்
பணமும்
ஒருவகையில் ஒன்று தான்.*
*இரண்டுமே
நிலையாய் இருப்பதில்லை
மனிதர்களிடத்தில்.*
*சிலர் நமக்கு
மனவலிமை தருகிறார்கள். *
*சிலர் நமக்கு
மனவலியைத் தருகிறார்கள். *
*மனவலிமையோடு
மனவலியைக்
கடந்து செல்வோம். *

No comments:

Post a Comment