Thursday 12 October 2023

போதும் என்ற மனநிலை

 போதும் என்ற மனநிலை . . .

*வாழ்க்கை என்பது
ஒரே ஒருமுறை கிடைக்கும் சலுகை
அதைக் கவனமாகச்
செலவழிப்போம்.*
*கசப்பாக இருந்தாலும்
உண்மையைச் சொல்லிவிடுங்கள்.*
*பல கசப்பான
நிகழ்வுகளைத்
தவிர்த்துக் கொள்ளலாம்.*
*ஒருவருக்கொருவர்
உதவிடத்
தயாராக இருந்தால்
இவ்வுலகில்
அனைவரும்
வெற்றியாளர்களே. *
*நாம் வாழும்
இவ்வுலகில்,
துன்பமும் துயரமும், பொதுவானதுதான்.*
*அதைக் கையாளும்
விதம்தான், ஆளுக்கு ஆள், மாறுபடுகின்றது.*
*சிலர் முறையாகக் கையாளத் தெரியாமல், சோர்ந்து தடுமாறி, முயலாமல், முடங்கிப் போய்விடுவார்கள்.*
*சிலர் நேரான வழியில்
விடாமுயற்சி செய்து, நினைத்ததைச் சாதித்து விடுவார்கள்.*
*பொறுமையின் உச்சமே
போதும் என்ற
மனநிலைக்கு
நம்மைக்
கொண்டுவந்து விடுகிறது.*
*ஒரு நல்ல விருந்தினனுக்கு
அடையாளம்*
*அவன் எப்பொழுது இடத்தைக்
காலி செய்ய வேண்டும்
என்று
தெரிந்து வைத்திருப்பதே.*
*உன்னால்
செய்ய முடியாததை
கடைபிடிக்க முடியாததை*
*மற்றவர்களிடம்
எதிர்பார்க்காதே.*
*எவன் ஒருவன் தன்
அறிவின் அகந்தையால்
பிறரை அவமதிக்கின்றானோ*
*அவன் அறிவுடையோன்‌
என்றாலும் மந்த புத்தியுடையவன்.*
*எந்தவொரு நிகழ்வும்
காரணமின்றி நடப்பதில்லை.*
*அதை தனக்குச் சாதகமாக
மாற்றும் எவரும் தோற்பதில்லை.*

No comments:

Post a Comment