Tuesday 24 October 2023

வழிகளும் வலிகளும்

 வழிகளும் வலிகளும் . .

*வாழ்வில் ஒவ்வொருவரின்
பாதைகள் வேறு பயணங்கள் வேறு.*
*சிலரின் பயணத்தில் வழிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருக்கலாம்.*
*வலிகள் இன்றி அவர்கள் பயணம் செய்யலாம்.*
*சிலரின் பயணத்தில் வழிகளை உருவாக்க வேண்டி வரலாம்.*
*வலிகள் நிறைந்த பயணமாக இருக்கலாம்.*
*வலிகளை அனுபவித்த
நாட்களே மிகச் சிறந்த
வழிகாட்டியாக இருக்கும்.*
*உங்கள் வலிகளுக்கான
பல மடங்கு பலன்கள் நிச்சயம் கிடைக்கும்.*
*வழிகள் தெரியாமல் நிற்கும் பொழுது சோர்ந்து விடாதீர்கள்,
உங்களுக்காக இறைவன்
ஒரு புது வழியையே உருவாக்கலாம்.*
*உங்களுக்கான பாதைகள்
உங்களை வாழ்வில் மிகச் சிறந்த நிலைக்கு
இட்டுச் செல்லலாம்.*
*ஆகவே பாதைகள் எப்படி இருந்தாலும் இறைவனை நம்பிப் பயணத்தைத் தொடருங்கள்.*
*உங்கள் பயணங்கள்
நிச்சயமாக சிறப்பாக இருக்கும்.*
*இன்று நீங்கள் படும் கஷ்டங்களை வைத்து நாளை உங்கள் வாழ்க்கையை நிர்ணயித்து விடாதீர்கள்.*
*பிரபஞ்சம் எந்த நேரத்திலும் யாருடைய வாழ்விலும் எத்துணை பெரிய அதிசயத்தையும் நிகழ்த்தலாம் .*
*நாம் அதை வரவேற்கத் தயாராக இருந்தால் மட்டும் போதும்.*
*நேர்நிலையான
சிந்தனைகளோடும்
நம்பிக்கையோடும்
இருங்கள்.
நிச்சயம் நல்லதே நடக்கும்.*

No comments:

Post a Comment