Saturday 21 October 2023

இலக்கை அடையலாம் . .

 இலக்கை அடையலாம் . .

பொய்யான அன்பு,
பொழுதுபோக்கான பேச்சு, தேவைப்படும் போது தேடல்.
இதுதான் இங்கே பலரது
வாழ்க்கையாக இருக்கிறது.
இன்று எதையெல்லாம்
வேண்டும் என்று நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்களோ, ஒரு நாள் அவற்றை எல்லாம் வேண்டாம் என்று கூற வைத்துவிடும் இந்த வாழ்க்கை.
எதிர்பார்ப்புகள் இல்லாத
வாழ்க்கையை எப்போது நீங்கள்
தேடிச் செல்கிறீர்களோ
அப்போது தான்
கவலைகள் இல்லாத வாழ்க்கை
உங்களைத் தேடி வரும்.
விளக்கிற்கு வெளிச்சம்
தர மட்டும் தான் தெரியும்,
தேவை எங்கு என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
*கழுகுகள் எழுபது வயது வரை வாழக்கூடியவை.
ஆனால் அது அவ்வளவு
சுலபமாக அந்த வயதை எட்டி விடுவதில்லை.*
*சுமார் நாற்பது வயதைத் தொட்ட உடன் முதுமையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றன.*
*இறகுகள் வலுவிழந்து
கனமாகி விடுகின்றன.*
*அலகு வளைந்து போய்விடும்.
கால் நகங்களும் இடையூறாக மாறி இரையைப் பிடிக்க முடியாமல் செய்துவிடும். *
*இந்த நிலையில் அந்தக் கழுகுகள் இக்கட்டான ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றன.*
*ஒன்று முதுமையின்
மாற்றங்களினால் செத்து மடிய வேண்டும்
அல்லது ஒரு கடுமையான
மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும்.*
*இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கும் கழுகு மலை உச்சிக்குச் சென்று பாறையின் மீது மோதி தன் அலகை தானே உடைத்துக் கொள்ளும். நகங்களையும் இறகுகளையும் பிய்த்துவிடும். பிறகு பல மாதங்கள் உணவின்றி தவம் போல் புதிய இறகுகளும் புதிய அலகும், நகங்களும் முளைக்கும் வரை காத்துக் கொண்டிருக்கும் .*
*பிறகு அதனால்
30 ஆண்டுகள் வரை
தொடர்ந்து வாழ முடியும் .*
*கழுகுகள் போலத் தான்
நாமும் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்றால்
அதற்கு இடையூறாக இருக்கும்
நம் தீய எண்ணங்கள்,
தீய பழக்கங்களைப் பிய்த்து எரிந்துவிட்டு
நல்லவைகளோடு நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டு
முன்னேற வேண்டும். *

No comments:

Post a Comment