Monday 16 October 2023

மேம்பாட்டு வழிகள்

 மேம்பாட்டு வழிகள் . .

உங்களுக்கு நம்பிக்கை குறையும்போதெல்லாம் இந்த பாசிடிவான வார்த்தைகளை சொல்லிக்கொள்ளுங்கள்.
நம்பிக்கையை அதிகரிக்க
நேர்நிலையான வாக்கியங்களைச் சொல்லுங்கள்.
மனம் தளர்ந்து சோர்வாக இருக்கும் நேரங்களில் அதிகபட்சம் நமக்கு தேவைப்படுவது நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் தான்.
சில நேரங்களில் நம்மைச் சுற்றி ஊக்கப்படுத்தும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அத்தகைய நேரத்தில், நமக்கு நாமே நம்பிக்கை அளிக்க பின்வரும் வார்த்தைகளைக் கூறுங்கள்.
உங்களைப் பற்றி நீங்கள் தாழ்வாக நினைக்கக் கூடாது.
அவ்வாறு நினைத்தால்,
உங்கள் மீது உங்களுக்கே கழிவிரக்கம் தோன்றும்.
நம்பிக்கை அதிகரிக்க:
நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன், என் மீது நான் அதிகமாக மதிப்பு வைத்துள்ளேன்.
வளர்ச்சி :
நான் வளர்கிறேன்,
ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்கிறேன்.
திறமைகள் :
என் மீதும், என்னுடைய திறன்கள் மீதும் எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது.
சக்தி :
இந்த உலகை மாற்றும் சக்தி என்னிடம் உள்ளது. என்னுடைய செயல்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
மன உறுதி:
நான் எதைச் செய்ய வேண்டும் என்று உறுதி செய்தாலும், அதை என்னால் முழுவதுமாக செய்து முடிக்க முடியும்.
திறன்:
பிரச்சனைகளையும், சிக்கல்களையும் தீர்வு காண்பதற்கு என்னுடைய திறன்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
சவால்:
ஒவ்வொரு சவாலை எதிர்கொள்ளும் போதும் நான் வளர்கிறேன். எந்தத் தடையும் என்னைத் தடுக்க அனுமதிக்க மாட்டேன், பின்வாங்க மாட்டேன்.
கடின உழைப்பு:
நான் கடினமாக உழைத்து வருகிறேன், என்னுடைய லட்சியங்களை அடைவதற்கு திட்டங்கள் உருவாக்கி அதன் படி செயல்பட்டு வருகிறேன்.
வெற்றி:
நான் விரும்பும் விஷயங்களில் எல்லாம் வெற்றி பெறுவதற்கு தேவையான எல்லா விஷயங்களும் என்னிடம் இருக்கிறது அல்லது எளிதில் கிடைத்து விடும்.
டிரஸ்ட்:
நம்பிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை நான் விட்டுவிட்டேன். இப்போது என் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.
பிரச்சனை:
நிறைய பிரச்சனைகள் இருக்கும் என்று தெரியும், ஆனால், என்னால் எல்லா சவால்களையும் பிரச்சனைகளையும் எளிதில் எதிர்கொள்ள முடியும். என்னால் மீள முடியாத எந்தவிதமான பிரச்சனையோ சவாலோ இல்லை என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
கனவு:
நாம் வாழ விரும்பும் கனவு வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் நானே உருவாக்குகிறேன், அதில் வாழ்கிறேன்.
எக்ஸ்ப்ரஷன்ஸ்:
என்னுடைய உண்மையான மனதை, நான் நினைப்பதை எளிதாகவும், வெளிப்படையாகவும் கூற என்னால் முடியும் என்பது எனக்குத் தெரியும்.
சிறந்த திறமைகள்:
ஒவ்வொரு நாளும் என்னை நான் மேம்படுத்திக் கொள்ள, என்னுடைய திறமைகளை வளர்க்க முயற்சி செய்து வருகிறேன்.
என் மீதான நம்பிக்கை:
நான் வெற்றி பெறுவதற்கு தேவை, என்னை நான் நம்புவது மற்றும் என்னுடைய திறமைகள் மீதான நம்பிக்கை மட்டுமே.
கட்டுப்பாடு:
என் வாழ்க்கை முழுவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது. என் வாழ்வில் என்னை மீறி எதுவும் நடக்காது.
எதிர்மறையான பேச்சு:
எதிர்மறையான பேச்சு மற்றும் வார்த்தைகளை நான் தவிர்க்கிறேன், மற்றவர்கள் என்னை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை.
வசதியான சூழல்:
எப்போதுமே எனக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதை விரும்பவில்லை, கம்ஃபர்ட் சோனில் இருந்து அவ்வப்போது வெளி வரலாம்.
எனக்கு நான் உண்மையாக இருப்பது:
என்னுடைய குறைகள்,
பிழைகளை நான் முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment