Friday 6 October 2023

வாழ்க்கைப் பாடம் . .

 வாழ்க்கைப் பாடம் . .

எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, *"வாழ்க்கையின்
திறவுகோல் மகிழ்ச்சி"*
என்று என் அம்மா என்னிடம் கூறினார். ​​​​நான் வளர்ந்த பிறகு பள்ளிக்குச் செல்லும்போது, என்னவாக இருக்க வேண்டும் என்று பள்ளியில் என்னிடம் கேட்டார்கள்.
நான் "மகிழ்ச்சியாக வாழ வேண்டும்" என்று எழுதினேன்.
எனக்கு "படிப்பு புரியவில்லை"
என்று பள்ளியில் என்னிடம் சொன்னார்கள். அவர்களுக்கு "வாழ்க்கை புரியவில்லை" என்று நான் அவர்களிடம் சொன்னேன்.
எந்த ஒரு தொழிலிலும் லாபம்தான் அடிநாதமாக இருக்கும். ஒவ்வொரு நாளின் முடிவில் ஒரு தொழிலதிபருக்கு அவர் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதுதான் முக்கியம்.
அதேபோல, வாழ்க்கையிலும் மகிழ்ச்சியே அடித்தளம். ஒவ்வொரு நாளின் முடிவில், நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா
என்பதுதான் நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும்.
எந்தவொரு வெளிப்புறக் காரணியையும் சார்ந்து கிடைக்கும் மகிழ்ச்சியானது எப்பொழுதும் தற்காலிகமானது.
அதனால்.
உங்கள் மகிழ்ச்சிக்கான சாவியை வேறொருவரின் பாக்கெட்டில் வைக்காதீர்கள்.
*உங்கள் மகிழ்ச்சிக்கான
சாவி
உங்களிடமே இருக்கட்டும்.*

No comments:

Post a Comment