Tuesday 25 April 2023

உயிர் வாழ்வதும் ஆசைதான்.

 உயிர் வாழ்வதும் ஆசைதான்.

ஒரு மனிதர் ஒரு ஞானியைச் சந்தித்தார். அவரிடம், நான் கடவுளை அடைய வேண்டும்.
எனக்கும் கடவுளுக்கும்
எவ்வளவு தூரம் என்று கேட்டார்.
ஞானி உடனே, ஒரு தாளினைக் கொடுத்து, அந்த மனிதரிடம் அவரது எல்லா ஆசைகளையும் அதில் எழுதி பட்டியலிடக் கூறினார்.
அந்த மனிதர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசைகளை பட்டியலிட்டு, ஞானியிடம் கொடுக்க, அந்த ஞானி, அந்த மனிதரிடம் கூறினார்.
இந்த ஆசைப் பட்டியல் தான், உனக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தூரம், என்று ஞானி கூறினார். பட்டியலின் நீளம் அதிகமானால் உனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தூரம் அதிகமாகும்.
பட்டியலின் நீளம் குறைந்தால் உனக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தூரம் குறையும்
என்று ஞானி கூறினார்.
ஆசைகள் இல்லாமலே வாழ முடியாதா என்று கேட்டால், வாழ முடியாது. உயிர் வாழ்வது என்பதே ஆசைதான். இறைவனை அடைய வேண்டும் என்று எண்ணுவது ஆசைதான். ஆனால், வாழ்வின் நோக்கத்திற்காக இல்லாத, தேவையில்லாத ஆசைகள் தான் வாழ்க்கையின் பாதையை திசை மாற்றுகின்றன.

No comments:

Post a Comment