Monday 17 April 2023

மூலநக்ஷத்திரம்- ஸ்ரீ ஹனுமன்

 *மூலநக்ஷத்திரம்

- ஸ்ரீ ஹனுமன்!*_
*அஞ்சிலே ஒன்று பெற்றான்*
அஞ்சிலே ஒன்று காற்று - வாயு! 'வாயுபுத்ரன்' எனும் ஹனுமன்!
*அஞ்சிலே ஒன்றைத் தாவி*
அஞ்சிலே ஒன்று நீர் - கடல்!
அந்தக் கடலை தாண்டி சென்று அன்னையை தரிசித்தவன் ஹனுமன்!
*அஞ்சிலே ஒன்று ஆறாக*
அஞ்சிலே ஒன்று ஆகாயம்!
அந்த ஆகாயத்தின் வழியாக பறந்தான் - யாருக்காக?
*ஆரியர்க்காக ஏகி*
அருமையான
இயல்பு கொண்ட ராமனுக்காக!
*அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு*
அஞ்சிலே ஒன்று பூமி - மண்! அந்த மண்ணிலே தோன்றிய அணங்கு (பெண்), சீதை!
*கண்டு அயலார் ஊரில்*
அயலார் ஊரான லங்கையில் அவளைக் கண்டு!
*அஞ்சிலே ஒன்றை வைத்தான்*
அஞ்சிலே ஒன்று நெருப்பு - தீ! அந்த தீயை அவனுக்கு வைக்க, அதையே அவர்களுக்கு திருப்பி வைத்தான் ஹனுமன்!
*அவன் நம்மை அளித்துக் காப்பான்*
ஹனுமனின் இதயகமலத்தில் வாசம் செய்பவன் ஸ்ரீராமன்!
அந்த ஸ்ரீராமனையே நம்முன் கொண்டு வந்து நம்மைக் காப்பவன் ஹனுமன்!!

No comments:

Post a Comment