Thursday 20 April 2023

பணிவும் அடக்கமும் . .

 பணிவும் அடக்கமும் . .

*விசிறியை அசைக்காமல்
காற்றும் வராது
வியர்வை சிந்தாமல்
வெற்றி கிடைக்காது!!*
*எந்த ஒரு தெளிவில்லாத வினாவிற்கும் சிறந்த
விடை மவுனம்!!*
*எந்த ஒரு சூழ்நிலைக்கு சிறந்த எதிர்வினை புன்னகை!!*
*பிறருடைய மனதை கவர்வது நம்முடைய அறிவோ அழகோ அல்ல!!*
*நாம் பழகும் விதமும் பிறரை நாம் மதிக்கும் விதத்தில் தான் அமையும்*
*சோதனைகளின் பலனாகக் கிடைத்த அடக்கமும் பணிவும் அதிகமாகின்றன. சோதிக்கப்பட்ட மனிதன், பிறகு பலருடைய மரியாதைக்கும் உரியவனாகிறான்.*
*ஆகவேதான், நல்லவனை மிக நல்லவனாக்குவதற்கு வேதனைகளையும், சோதனைகளையும் இறைவன் தொடர்ந்து வழங்குகிறான்.*
*எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், இறைவனுக்கு நன்றி சொல்வதை மட்டும் மறக்காதீர்கள், நிறுத்தாதீர்கள்.
உங்களைப் பக்குவப் படுத்துவதற்கே கஷ்டங்கள் வந்துள்ளன.*
*இறைவன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். துன்பங்கள் அனைத்தும் பனி போல விலகும்.*

No comments:

Post a Comment