Thursday 6 April 2023

நிம்மதியான தூக்கம்.

 நிம்மதியான தூக்கம்.

ஒருவருக்கு எந்தளவு சொத்து இருக்கிறதோ அந்தளவு அவர் சந்தோஷமானவர், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்’ என்று சொல்லப்படுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா. இந்த எண்ணத்தில்தான், கோடிக்கணக்கான மக்கள் நிறைய பணம் சம்பாதிப்பதற்காகத் தினம்தினம் இலக்கு இல்லாமல் உழைத்துக் களைத்துப் போகிறார்கள். ஆனால், காசு பணமும் சொத்து சுகமும் நிலையான சந்தோஷத்தைத் தருமா, அதுக்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா.
நம்முடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகு, வருமானம் எவ்வளவுதான் அதிகமானாலும், அது நம்முடைய சந்தோஷத்தையோ மனநிறைவையோ கடுகளவுகூட அதிகரிக்காது என்று ஜர்னல் ஆஃப் ஹேப்பினஸ் ஸ்டடீஸ் சொல்கிறது.
*"பணம் பிரச்சினைக்குக் காரணமல்ல." “பணம், பணம் என்று அலைவதுதான் பிரச்சினைக்குக் காரணம்”* என்கிறது மானிட்டர் ஆன் ஸைக்காலஜி என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை.
பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது.
“வெள்ளியை நேசிக்கிறவன் எவ்வளவு வெள்ளி கிடைத்தாலும் திருப்தியடைய மாட்டான். சொத்துகளை விரும்புகிறவன் எவ்வளவு வருமானம் வந்தாலும் திருப்தியடைய மாட்டான்.”
“வேலை செய்கிறவன் கொஞ்சம் சாப்பிட்டாலும் சரி, நிறைய சாப்பிட்டாலும் சரி, நிம்மதியாகத் தூங்குவான். ஆனால், ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் தூங்க முடியாமல் தவிப்பான்.”
இந்த கவலைக்கு காரணம், தீராத பண ஆசைதான்.
ஒருவருக்குப் பண ஆசை இருந்தால், உண்மையான சந்தோஷத்தைத் தருகிற விஷயங்களுக்காக, அதாவது தன் குடும்பத்தாருக்காக, நண்பர்களுக்காக, ஆன்மீகக் விஷயங்களுக்காகக் கொடுக்க வேண்டிய பொன்னான நேரத்தை கூட கொடுக்காமல் போய்விடலாம்.
வாழ்வது ஒரு முறை. சிந்தித்து செயலாற்றுவோம்.

No comments:

Post a Comment