Thursday 20 April 2023

திரைப்பாடலில் திருவாசகம்!

 திரைப்பாடலில் திருவாசகம்!

*******************************
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஆன்மிக இலக்கியத்தை, பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில். மிக எளிமையாகவும், இனிமையாகவும் பல பாடல்களை எழுதியுள்ளார்.
அவர் ஒருநாள் பழைய புத்தகம் ஒன்றில் திருப்புகழின் பெருமை குறித்து, புலவர் ஒருவர் எழுதியிருந்த வெண்பாவை படிக்கிறார்....
"எல்லாரும் ஞான
தெளிஞரே கேளீர்
சொல் கல்லெல்லாம் மாணிக்க கல்லாமோ-பொல்லா கருப்புகழை கேட்குமோ கான மயில்வீரன் திருப்புகழை கேட்கும் செவி "
இதில் வரும் மாணிக்க என்ற சொல்,கவிஞருக்கு, திருவாசகம் தந்த மாணிக்க வாசகரை நினைவு படுத்துகிறது.உடனே இந்த நினைவை, காதலியை புகழ்ந்து பாடும் ஒரு பாடலில் அழகாக சேர்த்து, பாமரனின் இதயத்தில்
திருவாசகத்தை தந்தவர் மாணிக்கவாசகர் என்றும், திருவாசகம் கல்லையும் கனியவைக்கும் வாசகமாகும் என்று பதியவைக்கிறார். சைவசமய பெரியவர்கள் பரப்ப வேண்டிய கருத்தை, பட்டப் படிப்பைக்கூட எட்டாத கவிஞன் தன் எழுத்தால் கொண்டு சேர்த்தான்.
எவரும் எட்ட முடியாத உயரத்தை தொட்டான் என்பது உண்மை. நாமெல்லாம் மலைத்து நிற்கிறோம் அவனது திறமை கண்டு! அவர் எழுதிய பாடல்...
"கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? சொல்லெல்லாம் தூயதமிழ் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ ்சிந்தும் சுவையாகுமா? கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்! கல்லை கனிவாக்கும் உந்தன் ஒருவாசகம்! "
இப்படி கவியரசரை தவிர, வேறு எந்த கவிஞரால் எழுதமுடியும்!
ஒரு பாடலுக்கு "ஹம்மிங்"என்பது ஒருவகையான ஒத்திசை. காட்டுவழிப் பயணத்தில் கூடவே வரும் குயிலின் கீதம் போன்றது! வரிகளின் நேர்த்தியில் ஒரு பாடலை இசைவண்ணமாய் செய்யும்போது தூரிகையின் ஈரம்போல ஹம்மிங் இருப்பது அந்த பாடலுக்கு கூடுதல் சிறப்பு. இப்படி ஹம்மிங் இனிமையோடு வந்த பல பாடல்களில் ‘ஆலயமணி’ படத்தின் ‘கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா’ ஓர் மிக சிறந்த படைப்பு!
TM.சௌந்தரராஜன் அவர்கள் பாடல் முழுவதையும் பாட, ஹம்மிங் பாடும் LR.ஈஸ்வரி அம்மாவின் குரல் பாடலின் மொத்த அற்புதத்தையும் அழகாய் எடுத்து காட்டும்!
மெல்லிசை மன்னர்களின் இனிமையான இசையில் கவியரசர் எழுதிய இந்த பாடல் பெண்ணின் அழகை சொல்வதாக விரியும்! நாயகன் நாயகியை ஓவியமாக வரைந்தபடி, அவளது அழகினை ரசித்து பாடுவதாக காட்சியின் சூழல்.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
பார்ப்பது உணர்வது அனைத்தும் உன்னை போல் அழகாகுமா.. என உட்பொருள் பொதிந்த பல்லவி!
"கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லை கனிவாக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?
சித்திரம் சீராய் வரையப்பட்டு வர,
திருவாசத்தோடு ஒப்பிட்டு நீ சொன்னால் கல்லும் கனியும் என்று நாயகியின் அழகுணர்ச்சி முதல் வரியில்...அதனை தொடர்ந்து வர்ணிப்பு..
சிறுத்த இடையின் அழகினை சொல்ல
"இல்லாத இடை" என சொல்வது கவிஞர்களின் இயல்பு நடை! இங்கு அதை, மின்னலாய் சட்டென அசையும் ஆற்றலுடையது என இடுப்பு அழகை "மின்னல் இடை"என கவியரசர் சொல்ல ஈர்ப்பு கூடுகிறது!
ஓவியம் வரைந்து முடிக்க, பாடல் நிறைவு பெறும்! பல்லவிக்கு முன் வரும் இசையாகவும், பாடலின் இடையிடையே இசையாகவும் LR. ஈஸ்வரி அம்மாவின் ஹம்மிங் பாடலின் மொத்தத்திலும் மலரும் அழகு!
நன்றி கவியரசர் கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment