Monday 10 April 2023

திருவிழா போல நடைபெற்ற அசத்தல் ராமநாதன் திருமணம்.


இன்று காலை சிறுகூடல்பட்டியில் நடைபெற்ற அருமைத் தம்பி, நகைச்சுவை அரசு, வழக்கறிஞர், மிகச் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், வரலாற்று சிறப்புமிக்க தேவகோட்டையில் பிறந்து கவிச் சக்கரவர்த்தி கம்பனும், அருள்மிகு கண்ணுடையநாயகி கண்ணாத்தாள் பூமியான நாட்டரசன்கோட்டையில் வளர வந்துள்ள எஎஸ். சுப்பிரமணியன் என்ற ராமநாதன் - அலமேலு விசாலாட்சி
திருமண விழாவில் மனிதத்தேனீ, அலமேலு சொக்கலிங்கம், பேராசிரியர் சி எஸ். விசாலாட்சி.
கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் எங்கும் பெருமக்கள் திருக் கூட்டம்,
சின்னத் நாயகன் ஈரோடு மகேஷ் நட்பின் பேருள்ளமாக வாழ்த்தரங்கத்தினைத் தொகுத்து வழங்கிட, நமது வழிபாட்டுக்குரிய கண்டனூர் அருளாடியார் பழனியப்ப செட்டியார், காரைக்குடி அரண்மனைப் பொங்கல் ஐயா மற்றும் பழனி ஆதீனம்,, குன்றக்குடி அடிகளார், தருமபுர ஆதீனம் தம்பிரான், துலாவூர் சுவாமிகள், பாதரக்குடி சுவாமிகள் என பல்வேறு மடாதிபதிகள், பொற்கிழிக் கவிஞர் சொ சொ மீ சுந்தரம், மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம், சோம. வள்ளியப்பன், மு. சொ. அழகப்பன், பேராசிரியர் சி எஸ் விசாலாட்சி, மலர்விழி பழனியப்பன், சின்னத்திரை நட்சத்திரங்கள் பேராசிரியர் பழனி தம்பதியர், அறந்தாங்கி நிஷா, மதுரை ராமகிருஷ்ணன், மற்றும் ரவி தமிழ்வாணன், அரசி முத்துக்குமார், அருளிசைமணி பெங்களூர் எல். சோமு, கமலா பழனியப்பன், ஆறாவயல் பெரியய்யா உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
அரங்கம் முழுவதும் பங்கேற்ற பெருமக்கள் பாராட்டைப் பெற்றது இரண்டு மணி நேரம் நடைபெற்ற வாழ்த்தரங்கம்.
மணமகளின் பெற்றோர் மருத்துவர் ஏ. ராதாகிருஷ்ணன் - சரோஜினி ஆச்சி மற்றும் மணமகனின் பெற்றோர் நாட்டுக்கோட்டை சுப. லெட்சுமணன் என்ற செந்தில்நாதன் - லெட்சுமி ஆச்சி குடும்பத்தினர் மிகச் சிறந்த விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான நண்பர்கள் உறவினர்கள் என வருகை தந்த தமிழ் கூறும் நல்லுலகினர் மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
அனைத்து ஊர்களிலும் இருந்து நகரத்தார் சங்கத்தின் முன்னோடிகள் மற்றும் இளைஞர்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
வாழிய மணமக்கள் வாழியவே.






















































No comments:

Post a Comment