Tuesday 18 April 2023

ஒழுக்கம் நேர்த்தி தேசபக்தி

 RSS சென்னை - பத சஞ்சலன்

••| முப்பது வருஷத்துக்கு முன்னாடி காக்கி அரைடிரவுசர், வெள்ளை சட்டை, பட்டை பெல்ட், தலையில கருப்பு அரை தொப்பி, நெற்றியில் நீண்ட நாமம், கைல காவி கொடி...இப்படி எங்கப்பாவை ஊர்வலத்துல பார்த்தப்போ கொஞ்சமில்லை நிறையவே கூச்சமா இருந்தது.
எப்பவும் மொட மொடப்பான கதர் வேட்டி சட்டையில கம்பீரமா பார்த்த எனக்கு உண்மைய சொல்ல போனா இது என்ன கோமாளிதனம், வயசுக்கு சம்பந்தம் இல்லாமன்னு தோணுச்சு. பிரண்ட்ஸ் பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு ஒரு வெட்கம்.
ஊருல ஸ்கூல்ல ஆர்எஸ்எஸ் கேம்ப் அப்பப்போ பத்து நாள் நடக்கும். பெரியப்பா ஸ்கூல் அது. ஆர்எஸ்எஸ் ஆட்கள் பரபரப்பா ஓடி ஆடி வேலை பார்த்து அரேஞ் பண்ணுவாங்க.
சாப்பாடு, அவங்க தங்குற அரேன்ஜ்மெண்ட்ஸ்ன்னு கிட்டத்தட்ட வீட்ல கல்யாண வீட்டு தடபுடல் இருக்கும்.
ஒரு நாள் சாப்பாடு எங்க செலவு. யாரு சாப்பாடு குடுக்குறாங்களோ அந்த பேமிலி மட்டும் அன்னைக்கு போகலாம். மற்றபடி யாருக்கும் அனுமதி இல்லை.
எங்க சாப்பாடு வர நாள் நாங்க போவோம். ஒழுக்கம், நேர்த்தி, பஞ்சுவாலிட்டி இது அத்தனையும் அங்கே பார்க்கலாம்.
ஆர்எஸ்எஸ் ஐ குறை சொல்றவங்கள ஒரு நாள் சாகாவுக்கு கூட்டிட்டு போய் காட்டுங்க. அசந்துடுவாங்க.
ஏறத்தாள 100 பேர் பங்கேற்பாங்க, கேம்ப் முடிஞ்சு கிரவுண்ட பார்த்தா பத்து நாள் அங்கே அப்படி ஒரு ப்ரோக்ராம் நடந்த சுவடே இருக்காது, அவ்வளவு சுத்தமா இருக்கும்.
கடைசி நாள் அந்த ஊருல ஆர்எஸ்எஸ் ஈடுபாடு உள்ள ஆட்கள் வீட்டுக்கு ரெண்டு பேரை கூப்பிட்டு சாப்பாடு போட்டு விருந்து உபசரணை பண்ணி அவங்க நம்மகிட்ட பிரியாவிடை பெறும்போது மனசு ஒரு மாதிரி பீல் பண்ணுங்க.
அங்கே அந்த பத்து நாளும் எளிய சாப்பாடு, வசதிகள் தான். ஒவ்வொரு பசங்களும் ரொம்ப சாப்ட்டா அவ்ளோ அமைதியா பொறுமையா இருப்பாங்க. ஒரே டிரஸ்ல ஏழை பணக்காரன் வித்தியாசம் தெரியாது.
ஆனால் ஒவ்வொருதர் பேமிலி பேக்கிரவுண்ட் கேட்டா அட இந்த குடும்பத்துல உள்ள பையனான்னு நம்பவே முடியாது. அவ்வளவு வசதி வாய்ப்பு உள்ள குடும்பத்துல இருந்து வந்திருப்பான் ஆனால் அந்த எளிய வாழ்க்கைக்கு அழகா அடப்ட் ஆகி இருப்பான். ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.
கடைசி நாள் ஊர்வலம். ராணுவ ஒழுங்கு கூட தோத்து போயிடும். சரியா 40 நிமிஷம் பிளான்ன்னா ஒரு செகண்ட் முன்னே பின்னே ஆகாது.
ஊர்வலம் பிளான் பண்ணும் போது ஒருத்தர் அந்த தூரத்தை ரெண்டு மூணு தரம் நடந்து ட்ரையல் பார்த்து ஸ்பீட், வாக் எல்லாம் பிளான் பண்ணுவாங்க.
இன்னைக்கு ஊர்வலம். அப்பாவுக்கு இப்போ வயசு 74. இதோ டிரஸ் ரெடி. முன்னாடி இருந்து கூச்சம் வெட்கம் இல்லை. கம்பீரமா பீல் பண்றேன். பையனுக்கும் டிரஸ் ரெடி. பட் ரொம்ப கூச்ச படுறான். வயசு கோளாறு. சீக்கிரம் மாத்திடுவேன்ன்னு நம்பிக்கை இருக்கு.
கட்சி, அரசியல், இவற்றை எல்லாம் தாண்டி ஒவ்வொரு இளைஞனும் இந்தியனும், இந்துவும் தன் வாழ்வில் ஒரு முறையேனும் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை பயிற்சி அது.
உங்க குழந்தைகளையும் சேர்க்க பாருங்க. இந்த கலாச்சார சீரழிவிலிருந்து நம் பிள்ளைகளை காக்கும் சிறந்த வழி இது.
பாரத் மாதா கி ஜெய்.. ஜெய் பவானி..

No comments:

Post a Comment