Friday 18 March 2022

சாதிக்கலாம்.

 சாதிக்கலாம்.

வாழ்க்கை என்றால் வேதனைகளும், சோதனைகளும் இருக்கத்தான் செய்யும்.
துன்பம் என்னும் சகதியில் சிக்கி வீழ்ந்து விடாமல் சரியானபடி வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும்.
ஆம்... வாழ்க்கை என்பது ஒரு போராட்டம்... எதிர்நீச்சல் போட தெரிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு தெளிந்த நீரோடை என்று சொல்வதற்கு இல்லை. அதில் மேடு பள்ளமும், சுழியும், பாறைகளும் நிறைந்து தான் இருக்கும்.
வாழ்க்கைப் படகை ஓட்டிச் செல்லும் மனிதன் புவியில் அமிழ்ந்து விடாமலும் இருக்க, சரியான முறையில் துடுப்பைப் பயன்படுத்த வேண்டும்.
பேரறிஞர் பெர்னாட்ஷாவிடம் ஒருவர் வந்து,
"நான் பத்து முயற்சி செய்தால் ஒன்று தான் கை கூடுகின்றது , பத்தும் பலன் தர வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்"
என்று கேட்டபோது..."நீ நூறு முயற்சிகள் செய், பத்தும் பலன் தரும்" என்றார்.
இந்த முட்டாளுக்கு எவ்வளவு சொன்னாலும் எதுவும் ஏறாது என்று பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன் தான் பிற்காலத்தில் மின் குமுழை (Electric Bulp) கண்டு பிடித்தார்...
வெற்றி பெருமிதத்துடன் வெற்றி பெற்ற எல்லா சாதனையாளர்களைப் போல தடைக்கற்களை வெற்றிக்கு உரிய படிகங்கள் களமாக கண்டதால் தான்... தான் காண வேண்டியதை இறுதியில் கண்டு கொண்டு தனது இலக்கை அடைந்தார் தாமஸ் ஆல்வா எடிசன்.
ஆம் நண்பர்களே
வெற்றி பெற்ற மனிதர்களுக்குப் பின்னால் தோல்வி முகங்கள் பல உண்டு.
இன்பங்களும், துன்பங்களும், வருத்தங்களும், மகிழ்ச்சிகளும், வெற்றிகளும், தோல்விகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் கலந்தது தான் வாழ்க்கை.
நமக்கு ஏற்றம் வந்தாலும் சரிவு வந்தாலும் ஒரே தன்மையுடன் அவைகளை ஏற்றுக்கொண்டு, சோர்ந்து விடாமல் வாழ்வில் வெற்றி காணுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment