Saturday 5 March 2022

மதிப்பும் பாராட்டும்

 மதிப்பும் பாராட்டும்

நம் பணிகளால் வரவேண்டும்.
தான் பிறரால் பாராட்டப்பட வேண்டும்
பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்
பிறரால் மதிக்கப்பட வேண்டும்
இதுபோன்ற பல ஏக்கங்கள் எல்லா மனிதர்களின் அடிப்படையான உணர்வு ஆகும்.
பொதுவாக இவையனைத்தும் அங்கீகார ஏக்கம் எனலாம்
இந்த ஏக்கம் சிலநேரங்களில் கடன்காரனாக மாற்றி
தற்கொலை முயற்சி வரை கொண்டு சென்று விடுகிறது
தன்னைப் பிறர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக
தன்னை வசதி உடையவர்களாக காட்டிக் கொள்வதற்காக
தனது வசதியை மீறி கார், ஸ்மார்டாபோன் இவையெல்லாம் கடனுக்கு வாங்கி
சமூக கட்டமைப்பில் அந்தஸ்து உடையவர்களாக காட்டிக்கொண்டு
அதன் மூலம் மற்றவர்களது அஙகீரத்தைப் பெற முயன்று
இறுதியில் அதை சமாளிக்க முடியாயல் திணரும் அன்பர்கள் பலர்.
இதில் ஒரு கஷ்டமான சூழல் என்னவெனில்
இவர்கள் கஷ்டம் வரும் நேரத்தில்
இதுபோன்ற அந்தஸ்து காட்டி இணைந்த நண்பர்களிடம் உதவியும் கேட்க முடியாமல்
தனது துன்பங்களை பகிர்ந்துகொள்ள முடியாமல்
அல்லல்படும் அன்பர்களும் இருக்கிறார்கள்
அவர்கள் பகிர்ந்து கொண்டால்
அவர்களது நட்பு போய்விடும் என மறைக்கவே முயன்று
அதைச் சரி செய்ய மேலும் மேலும் கடன் பெற்று சமாளிக்க வேண்டிய மனகஷ்டமான நிலைக்கு காரணம்
தான் பிறரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனும் ஏக்க நிலையே ஆகும்.
இந்த மனநிலைக்கு காரணம்
சிறுவயதிலிருந்து நாம் வளர்த்து வந்த பழக்க நிலைதான் காரணம் ஆகும்
தன்னை மற்றவர் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக
நாம் மேற்கண்ட நடவடிக்கைகளும் காரணம் ஆகும்
நாம் எதைச் செய்தாலும் மற்றவருடைய அங்கீகாரத்திற்கான எதிர்பார்க்கும் மனநிலையும் காரணமாகும்
இதைத் தவிர்க்க எளிய பயிற்சி
நாம் எந்தச் செயலைச் செய்தாலும் மற்றவருடைய பாராட்டுதலுக்கு எதிர்பார்க்காமல்
இச்செயல் இப்பிறப்பின் கடன் எனப் பணி செய்தல்
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டு
மற்றவர்களது விமர்சனங்களுக்கு ஆசைபடாமல் வாழ்வை பயணிப்போம்.

No comments:

Post a Comment