Thursday 10 March 2022

மற்றவர்களுக்கு உதவுவோம்.

 மற்றவர்களுக்கு உதவுவோம்.

உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட நீ வசதி பெற்றிருக்கிறாய்.
உனக்கு வங்கியில் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். இந்த உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை.
உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.
நோயின்றி காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பெரும் பாக்கியசாலியே....
நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் அலைபேசியில் உன்னால் பேச முடிந்தால், அவ்வாறு பேச வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.
பார்வையும், செவித்திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்..
போர், பட்டினி, சிறை தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்துகொள்.
கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.
தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்குத் தண்ணீர் கிடைத்தால் நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர் தான். இந்த உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.
கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுதப் படிக்க இயலாத 80 கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.
உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்...
இணையத்தில் இந்தச் செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்!
நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும் தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல், கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா.
வீண் கவலைகளை விட்டு, அந்த கவலைகளைக் காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், போதை பொருட்கள் என்பவற்றை விட்டு, நான் அதிர்ஷ்டசாலி என்ற தைரியத்தோடு உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
இவை அனைத்துமே கடவுள் நமக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசுகள். நாம் எப்போதும் அவருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.
பதிவில் கூறிய அனைத்து வசதிகளும் நமக்கு கிடைத்திருக்கின்றது. இதற்கு நாம் தினமும் கடவுளிடம் நன்றி சொல்ல வேண்டும். அதனை விடுத்து தேவையற்ற கற்பனையான வலைகள், குழப்பங்கள் போன்றவற்றை நாளும் உருவாக்கி நிம்மதியின்றி நாம் வாழ்தல் தகுமோ? தினமும் சொல்லிப் பழகுங்கள் - நாம் அதிர்ஷ்டசாலி என்று

No comments:

Post a Comment