Monday 14 March 2022

உச்சகட்ட டென்ஷன்.. தலைநகர் கீவ் சுற்றி வளைப்பு

 *உச்சகட்ட டென்ஷன்.. தலைநகர் கீவ் சுற்றி வளைப்பு..........*

*உக்ரைன் மேயர் கடத்தல்.. வெற்றியை நெருங்கிய ரஷ்யா?*
*உக்ரைன் - ரஷ்யா இடையே விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,.....*
மெலிடோபோல் நகர மேயரை உக்ரைன் கடத்திவிட்டதாக உக்ரைன் நாடாளுமன்றத்தின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சுற்றி வளைக்கப்பட்ட உக்ரைன் தலைநகர்:கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது படையெடுக்கத் தொடங்கிய ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் கோர தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டும் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்தும் வருகின்றனர்.
இதுவரை 25 லட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா. தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் குற்றச்சாட்டு:இதனிடையே உக்ரைன் அமெரிக்காவின் உதவியுடன் உயிரியல் ஆயுதங்களை தயார் செய்து வந்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. தற்போது அதற்கான ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் உக்ரைன் ஈடுபட்டு வருவதாகவும் ரஷ்யா தெரிவிக்கிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டை அமெரிக்காவும் உக்ரைனும் மறுத்துள்ளன.
மேயரை கடத்திய ரஷ்யா:தலைநகர் கீவை கைப்பற்ற முடியாவிட்டாலும் மற்ற பகுதிகளுக்கு வேகமாக முன்னேறி வரும் ரஷ்யா தெற்கு உக்ரைனில் உள்ள மெலிடொபொல் நகரத்துக்குள் நுழைந்துள்ளது.
அந்த நகரின் மேயர் இவான் ஃபெடெரோவை 10 ரஷ்ய வீரர்கள் கடத்தி வைத்திருப்பதாக உக்ரைன் நாடாளுமன்றத்தின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
*தண்ணீர், மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு:*
ரஷ்யாவின் தாக்குதலில் பெரும் சேதங்களை சந்தித்து வரும் மாகாணங்களில் ஒன்று மாரிபோல். இங்கு ரஷ்ய படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள் 11 நாட்களாக மின்சாரம், தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இங்கு மட்டும் 1,200 அப்பாவி மக்கள் ரஷ்யாவின் தாக்குதல்களில் கொல்லப்பட்டு உள்ளனர். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ரஷ்ய படைகள் இங்கு தாக்குதல் நடத்தி வருவதாக நகர மேயர் தெரிவித்து இருக்கிறார்.
கட்டிடங்களை தகர்த்த ஏவுகணைகள்:நிப்ரோ என்ற நகரத்தில் நேற்று மட்டும் ரஷ்யாவின் 3 ஏவுகணைகள் கட்டிடங்களை தகர்த்துள்ளன. ஒரு காலணி தொழிற்சாலை ரஷ்யாவின் தாக்குதலில் சிதைந்து போயுள்ளது. அதில் பணியாற்றிய காவலாளி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளார்.
கார்கீவ் நகரத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 330 மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள கட்டிடம் தகர்ந்தது. தாக்குதலை தடுக்க அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ரஷ்யாவின் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் தாக்குதல் குறையவில்லை. கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.,

No comments:

Post a Comment