Friday 18 March 2022

வெளிப்படையாக இருங்கள்.

 வெளிப்படையாக இருங்கள்.

அந்த சிக்கன் கடை மூடும் நேரத்தில் கடைக்குள் நுழைந்தாள் ஒரு பெண்.
“சிக்கன் இருக்கிறதா?” கடைக்காரரிடம் கேட்டாள்.
ஃப்ரீசரைத் திறந்து பார்த்தார் கடைக்காரர். ஒரேயொரு சிக்கன் இருந்தது. அதை எடுத்து தராசில் வைத்தார். ஒன்றரை கிலோ இருந்தது.
அதைப் பார்த்த அந்தப் பெண், “இதைவிடப் பெரிதாக சிக்கன் இருக்கிறதா?” என்று கேட்டாள்.
கடைக்காரரின் கிரிமினல் மைண்ட் வேலை செய்தது.
உடனே அவர் தராசிலிருந்த சிக்கனை எடுத்து ஃப்ரீசருக்குள் போட்டுவிட்டு, கையை வெறுமனே துழாவிவிட்டு, முன்பிருந்த அதே சிக்கனை எடுத்துத் தராசில் வைத்தார். இப்போது தன் கட்டைவிரலை வைத்து லேசாக தராசுத்தட்டை அழுத்தினார். சிக்கன் 2 கிலோ காட்டியது.
“சூப்பர்” என்று சொன்ன அந்தப் பெண், “ரெண்டு சிக்கனையும் வாங்கிக் கொள்கிறேன்.. அதையும் எடுங்கள்” என்றாள்.
இப்போதுவரை ஃப்ரீசருக்குள் முகத்தை நுழைத்து இன்னொரு சிக்கனைத் தேடிக்கொண்டிருக்கிறார் கடைக்காரர்.
எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.
பணத்தைவிட நற்பெயர் சிறந்தது.
வெளிப்படையாக இருங்கள். அடுத்தவர்களைக் கவர்வதற்காக முட்டாள்தனமாக எதையும் செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment