Monday 7 March 2022

ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் வான்வெளியும் தடை செய்யப்பட்டிருப்பதால் அபரேஷன் கங்கா திட்டம் மூலம், அங்குள்ள இந்தியர்களை தரை வழியாக அண்டை நாடுகளான உர்மேனியா, ஹங்கேரி, போலந்து மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நமது மத்திய அரசு இந்தியா அழைத்து வருகிறது.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான சேவை நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை தவிர இந்திய விமானப்படையும் இந்த மீட்பு பணியில் இணைந்துள்ளது.
ஒரே நேரத்தில் அதிகப்படியானோரை அழைத்து வர ஏதுவாக விமானப்படையின் சி-17 ரக விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் தாய்நாடு திரும்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை இந்திய தனியார் விமான நிறுவனங்களின் 14 விமானங்கள் மூலம் 3,142 இந்தியர்களும், விமானப்படையின் மூன்று சி-17 ரக விமானங்கள் மூலம் 630 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேற்று வரை மொத்தமாக 43 விமானங்கள் மூலம் 9,364 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 விமானங்கள் மூலம் சுமார் 2,900 பேர் இந்தியா வந்துள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் 13 விமானங்கள் மூலம் 2200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவார்கள் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment