Wednesday 20 October 2021

ஆணவத்திற்கு வேலையில்லை.

 ஆணவத்திற்கு வேலையில்லை.

உலகில் நிரந்தரமானவை எதுவும் இல்லை..!துன்பம் மட்டும் என்ன விதிவிலக்கா.
பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல..!மனிதத்தின் உயர்ந்த பண்பின் ஓர் அறிகுறி..!!
மனிதன் சிரிப்பது மற்றவர்களைப் பார்த்து..! அவன் அழுவது தன்னைப் பார்த்து..!!
ஆயிரம் முறை சிந்தியுங்கள்..!ஆனால், ஒரேயொரு முறை முடிவு எடுங்கள்..!!
அடுத்தவன் தவறு செய்தால் நீதிபதியாய் தீர்ப்புச் சொல்கிறார்கள்..!அதையே அவர்கள் செய்தால் வக்கீலாய் வாதாடுகிறார்கள்..!!
உங்கள் குறைகளை... 'விரோதி' பிறரிடம் சொல்வான்.. 'நண்பன்' உங்களிடம் சொல்வான்..!!
எழும்போது 'தாங்க' வருகின்வரெல்லாம்.. விழும்போது 'தூக்க' வருவதில்லை..!!
வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது..!நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது..!!
பிரச்சனை நேரங்களில், சிலருக்கு..! பேசுதல் ஆறுதல்! அழுகை ஆறுதல்! கோபம் ஆறுதல்! மெளனம் ஆறுதல்!
ஆம் ஆறுதல் கூட மனசிருந்தால் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும்!
தண்ணீர் அமைதியாயிருக்கும் போது தூசிகள் அடியில் தானாகவே தங்கி விடும்.
வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள் தானாகவே அடங்கி விடும்.
வெள்ளை ஆடை அணிந்து கறைப்படாமல் வருவது எவ்வளவு கடினமோ.
அதைப் போல் சிறு தவறு செய்யாமல் ஒரு நாள் கடப்பது மிகவும் கடினம்.
நீங்கள் எவ்வளவு தான் நல்லவனாக வாழ்ந்தாலும் பத்து பேரில் இருவருக்கு உங்களைப் பத்தி தவறான அபிப்ராயம் இருக்கத்தான் செய்யும்.
அவர்களுக்காக உங்களுடைய தன்மையிலிருந்து என்றுமே மாறிவிடாதீர்.
நல்லவனாக வாழ்ந்தால் தான் இறைவன் உங்களுடன் பயணிப்பான்.
புரிதல் இருக்கும் இடத்தில் 'ஆணவத்திற்கு' வேலை இல்லை.. 'அடுத்தவர் ஆலோசனை' தேவையில்லை.. 'நீயா-நானா' என்ற போட்டியில்லை.. 'பிரிவிற்கு' இடமே இல்லை.
புரிதலில் தான் 'அன்பு' அழகாய் மலர்கிறது.

No comments:

Post a Comment