Saturday 30 October 2021

மனிதருக்குள் பாகுபாடு இல்லை.

 மனிதருக்குள் பாகுபாடு இல்லை.

On.30 -10-2021,இன்று,ஐப்பசிமாதம்,13,ம்,நாள்,
*சனிக்கிழமை***தசமி*திதி** Om🌺🌺🌺 🌹,*
மனிதர்களுக்குள் இருக்கும் பாகுபாடுகள் என்னென்ன?
மனிதருக்குள் பாகுபாடு என்பதேது! Om🌺🌺🌺
தேவகியின் மகனாக யாதவ குலத்திலே பிறந்து -வளர்ப்பிலே யசோதைக்கு மகனாக ஆயர்பாடியில் வளர்ந்து- கோபிகையின் நெஞ்சங்களில் நிறைந்து- நம்மை ஆட்டுவிக்கும் கண்ணனவன் - இரு தாயின் அன்பிலே பேதமை காண்பானோ !
நட்பிற்கு உதாரணமாக வாழ்ந்த ராமபிரான் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை கண்ட பின்பு மனிதருக்குள் பாகுபாடு என்பது இல்லை என்பதை புரிந்து கொள்வோம்….
தாய் கைகேயி பேச்சுக்கு கட்டுப்பட்டு ஸ்ரீராமபிரான் மனைவி சீதா தேவியோடு -தம்பி லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு பதினான்கு வருடங்கள் காட்டில் காலத்தை கழிப்பதற்காக வந்து கொண்டிருந்தார் .இதை அறிந்த வேடுவகுலத்தைச் சேர்ந்த குகன் என்பவன் கங்கைக் கரைஓரமாக ராமன் வரவை எண்ணிக் காத்துக் கொண்டு இருக்கின்றார்.அரசகுல மன்னன்ஸ்ரீராமனை வேடுவ குல மன்னனாகிய குகன் நட்புக்கொள்ள ஆசைப்பட்டு‌…கங்கை கரைஓரத்திலே , வேடுவ குலத்தை சேர்ந்த தம்மிடம் ஸ்ரீ ராமபிரான் பேச மாட்டாரோ!என தேனோடு மீனுடன் இது தகுமோ ! எனஐயத்தோடு காத்திருக்க -அங்கு வந்த ஸ்ரீராமனோ கனிவோடு குகனை நோக்குகின்றார்.
"ஜாதி மதம் நட்புக்குண்டோ- என்அன்பு நண்பனே* மலை மேலேமர உச்சிதனிலே கொண்ட தேன் போல உயர்ந்த தன்றோ !
நம் நட்பு.அதுமட்டுமா !
மீன் கூட்டம் மிகுந்து வாழும் கடல்தனிலே-
அதனினும் ஆழமன்றோ நம் நட்பு *அதை அறிந்தே என் நண்பன்மீனும், தேனும் எனக்களிக்க-
இந்த அன்பு என்றும் வேண்டும் என் நண்பா" எனக்கூறி அன்போடு குகனை ஆரத் தழுவிக் கொள்கிறார்.
குலம் பார்த்து வருவதில்லை நட்பு*குணம் பார்த்து வருவது தான் நட்பு*ஒன்றே குலம் *என வாழ்கின்ற மனதிற்கு உயர்வு -தாழ்வு என்பது எல்லாமே அவரவர் எண்ணங்களின் வெளிப்பாடுதான். உயர்ந்த எண்ணங்களை உடையவன் மேலோன் -தாழ்ந்த எண்ணங்கள் கொண்டவன் கீழோன்.
தனக்கென இலாது கொடுத்துச் சிவந்த கைகள் எல்லாம் மேல்சாதி. கைகளில் இருந்தும் கொடுக்க மனமிலாதோர் கீழ் ஜாதி என்பது தானே உண்மை.முதலில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்..
பிரம்மம் என்றால் என்ன ?
ஈஸ்வரன் யார் ?பிரபஞ்சம்என்றால் எது? மாயை
என்றால் என்ன? இவற்றுக்கிடையில் என்ன சம்பந்தம்? நான் யார் !எங்கிருந்து வந்தேன் !நான்செய்ய வேண்டியது என்ன ?முதலிய விஷயங்களை பற்றிய உண்மை அறிவு இல்லாமல் இருப்பதே-
அகங்காரம் -மமகாரம் -பற்று ஆசை இவைகள் அனைத்தும் விலகி மனிதன் பிரம்ம நிலையை அடையும் போது- நம்முடைய மனதில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் அடியோடு அழிந்து போகின்றது.
வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த ஒரு வரமாகும் . அந்த வாழ்க்கையை பாரதியின் கனவுப் படி வாழ்ந்து மனித பிறவியில் -உயர்வு தாழ்வு பேதமின்றி வாழ்ந்து மனித பிறவியின் பயனை அடையலாம்.
பால் வடியும் குழந்தையின்முகம் தனிலே-
தினம் வணங்கும் தெய்வத்தின் முன்தனிலே –
அன்புகனிந்த தாயின் அகம் தனிலேபண்பிலே சிறந்த நம் மனதினிலே பழையன போய்விடுக -புதியன என் மனதில் தோன்றிய எழுந்திடுக* என்று ஒரு புத்துணர்ச்சி கிடைத்திடவே- புதியதொரு ஜகம் அமைப்போம் புவியெல்லாம் ஒன்றுபட்டு இனிதாக வாழ்ந்திடுவோம்.நன்றி Om🌺🌺🌺 🙏 🌹
ஓம் நமசிவாய○ஓம் சிவாய நமஹ. ஓம் மஹேஸ்வராய நமஹ ஓம் சம்பவாய நமஹ. ஓம் பினாகினே நமஹ. ஓம் சசிசேகராய நமஹ. ஓம் வாமதேவாய நமஹ. ஓம் விருபாக்ஷாய நம‌ ஓம் கபர்தினே நமஹ. ஓம் நீலலோஹிதாய நமஹ ஓம் சங்கராய நமஹ, Om🌺🌺🌺
நன்றி கவியரசு கண்ணதாசன்

No comments:

Post a Comment