Monday 11 October 2021

நம்பிக்கை இழக்காதீர்கள்.

 நம்பிக்கை இழக்காதீர்கள்.

பண்டைய பெர்சியா நாட்டுல ஒரு வைர வியாபாரி இருந்தாராம். தன்னோட வைரங்களை எல்லாம் வியாபாரம் செய்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அது மிகப்பெரிய பாலைவனம், ஒட்டகத்தில கடக்கவே ஏழு எட்டு நாளாகும். தேவையான உணவு, தண்ணீர், அவர் வியாபாரத்தில சம்பாதிச்ச பணம் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஹாயா போய்ட்டுருந்தாரு‌.
நல்ல மதிய வேளை. ஒரு ஈச்ச மரம் இருந்தது‌. அந்த நிழல்ல கொஞ்சம் ஓய்வு எடுக்கலாமனு ஒட்டகத்த கட்டிபோட்டுட்டு பணத்த இடுப்புல முடிஞ்சிக்கிட்டு படுத்தாரு‌. அப்படியே தூங்கிட்டாரு. கொஞ்சநேரத்துல திடீர்னு ஒரு கொள்ளை கூட்டம் வந்து இவர அடிச்சி பணத்தப் புடுங்கி ஒட்டகத்தையும் ஓட்டிட்டு போய்ட்டாங்க.
நடு பாலைவனம். உயிர கொல்லும் வெயில். இப்போ வேற வழியே இல்ல, தன்னைக் காப்பாத்திக்க நடந்தே பயணம் செய்ய ஆரமிச்சாரு‌. கொஞ்ச தூரம் போனதும் தாகம் அதிகமாயிடுச்சு. எப்படியோ ஒருநாள் முழுக்க தண்ணீர் உணவு இல்லாம நடந்தே முக்கால்வாசி தூரம் கடந்துட்டாரு. இன்னும் சில மணிநேரம் நடந்தா சில கிராமங்களை அடையலாம்‌. ஆனா, அவரால முடியல. தாகம் ரொம்ப அதிகமாகிடுச்சு‌. நடந்து நடந்து கால்கள் மறந்து போச்சு. செத்துருவோமோனு பயம் வர ஆரமிச்சிச்சு. மனசுக்குள்ள கடவுளை வேண்ட ஆரமிச்சாரு‌.
தூரத்துல ஒரு சின்ன கொட்டகை தெரிஞ்சிச்சு. அங்க யாராவது இருப்பாங்கனு நம்பிக்கைல வழிய விட்டு விலகி அந்த கொட்டகையை நோக்கி நடந்தாரு‌. நடக்க நடக்க மனசுக்குள்ள பயம் வேற இவ்வளவு கஷ்டப்பட்டு அங்க போறோமே ஆனா அங்க யாருமே இல்லனா? தண்ணீர் கிடைக்கலனா? இருந்த தெம்பும் போய்டுமேனு பயம். ஒருவழியா கொட்டகைக்குப் போனார். இவர் சந்தேகிச்ச மாதிரியே அங்க யாரும் இல்ல‌. வாழ்க்கை இதோட முடிஞ்சது, இனி திரும்பப் போற அளவுக்கு உடம்புல சக்தியும் இல்ல, எல்லாம் அவ்வளவு தான்னு நோக ஆரமிச்சாரு. இப்படி கடவுள் என்னைக் கைவிட்டுடாரேனு அழுதார்‌.
பின்னர் கொட்டகைக்குப் பின்புறம் ஒரு தண்ணீர் பம்ப் ஒண்ணு இருந்தது. ஆனால் , அதில் தண்ணீர் வரவில்லை.அதுக்கு கீழ ஒரு கோப்பையில கொஞ்சம் தண்ணீர் இருந்தது‌. ஆனால்,தாகத்தை தணிக்கும் அளவுக்கு இல்லை. அந்த கோப்பையில் ஒரு வாசகம் எழுதியிருந்தது‌
"இதயத்தில் நம்பிக்கை நிறையும் போது, கண்களுக்குப் பாதை புலப்படும்"
இப்போது இவருக்கு இரண்டே வாய்ப்பு தான். ஒண்ணு அந்த கோப்பையில இருந்த ஒருவாய்த் தண்ணீரைக் குடிச்சிட்டுப் போகனும்‌. இல்லன்னா , அந்த தண்ணிய பம்ப்ல ஊத்தி அடிக்கனும். ஒருவேளை தண்ணீர் அப்போதும் வரலன்னா இருந்ததும் போய்ரும்‌.
இவருக்கு இருந்த தாகத்துல ஒரு சொட்டு தண்ணீர் கிடைச்சா கூட போதும்னு இருந்தது. கோப்பை எடுத்துக் குடிக்கும் போது அந்த வாசகம் என்னமோ இவர தடுத்தது‌. எப்படி இருந்தாலும் இந்த தண்ணி எனக்கு பத்தாது, குடிச்ச மறுகணமே தாகம் மறுபடியும் வரும். அப்போதும் நான் தாகத்தால சாகத்தான் போறேன். சரி, வாழ்க்கையில கடைசி யா ஒருதடவை கடவுள் மேல் முழு நம்பிக்கை வச்சி இந்த தண்ணிய பம்ப்ல ஊத்தி அடிப்போம்னு முடிவெடுத்தாரு‌.
முழு கோப்பை தண்ணியையும் ஊத்துன பிறகும் தண்ணிர் வரல. எவ்வளவு அடித்தாலும் தண்ணீர் வரல‌. ஒருகட்டத்தில அழுக ஆரமிச்சிட்டாரு. என் வாழ்க்கை இந்த கொட்டகையிலேயே முடியப் போகுது‌.
ஒருகட்டத்தில இப்படி ஒரு முடிவெடுத்தாரு, எப்படி இருந்தாலும் சாகப்போறேன் அது நம்பிக்கையான மரணமா இருக்கட்டும்‌. சாகும்வரை நம்பிக்கையா போராட போறேன்னு வேக வேகமா தண்ணீருக்காக அந்த பம்ப் அடிக்க ஆரமிச்சாரு. ஒரு 10 நிமிடங்கள் கழித்து ஒரு சொட்டு தண்ணீர் கீழே விழுந்தது. பிறகு அடிக்க அடிக்க தண்ணீர் வந்துகொண்டே இருந்துச்சு. அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம். கடவுள் என்னைக் கைவிடவில்லை ‌. தன் வயிறு நிரம்பும் வரை தண்ணீரைக் குடிச்சிட்டு அங்க இருந்த ஒரு மூங்கில் புட்டியில தனக்கு தேவையான தண்ணீரையும் எடுத்துகிட்டு புறப்பட்டார்‌. அப்படியே அந்த கோப்பையிலும் தண்ணீரை நிரப்பினார். அந்த வாசகத்தை பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார். நிம்மதியாக வீடும் சேர்ந்தார்.

No comments:

Post a Comment