Saturday 23 October 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள் 22.10.2021 வெள்ளிக்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
22.10.2021 வெள்ளிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🔊1879ல்
தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது வெண்ணிற மின்கூடு விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.
🔊2008ல் இன்று இந்தியா, சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவிய நாள்.
🔊1981ல் இன்று *கவியரசர் கண்ணதாசன் பொன்னுடல் எறியூட்டப்பட்டு நல்லடக்கம்* *செய்யப்பட்ட தினம்.* **
கவியரசர் உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார்.
அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக்
கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.
〰️〰️〰️⚰️✒️🔥〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தை என்ன
தேடிய செல்வமென்ன
திரண்டதோர்
சுற்றமென்ன கூடுவிட்டு
ஆவிபோனால் கூடவே
வருவதென்ன
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
ஆடும் வரை
ஆட்டம் ஆயிரத்தில்
நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளி வரை வருமா
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
தொட்டிலுக்கு
அன்னை கட்டிலுக்குக்
கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
சென்றவனைக்
கேட்டால் வந்துவிடு
என்பான் வந்தவனைக்
கேட்டால் சென்று விடு
என்பான்
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ...
*படம்: பாதகாணிக்கை*
இயக்கம்: கே.சங்கர்
தயாரிப்பு: ஜி.என்.வேலுமணி
சரவணா பிக்சர்ஸ்
இசை: விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு:
ஜெமினி கணேசன்,
சாவித்திரி,
விஜயகுமாரி,
கமல்ஹாசன்
வெளியீடு: 14.07.1962
நீளம்: 4505 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment