Monday 11 October 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 11.10.202 திங்கட்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
11.10.202 திங்கட்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🔊இன்று இந்திய அரசியல்வாதி ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினம்-1902.
🔊இன்று தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை கே. பி. சுந்தராம்பாள் பிறந்த தினம்-1908.
🔊இன்று பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள்
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த ஒரு பன்னாட்டு நினைவு நாள் ஆகும். பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்த பன்னாட்டு பெண் குழந்தைகள் தினமாக ஐநா 2011 ஆம் ஆண்டில் அறிவித்தது.
இந்த நாள் கனடாவினால் தீர்மானிக்கப் பட்டு பிற நாடுகளால் முன்மொழியப்பட்டு உலகமே ஏற்றுக்கொண்டது. இந்நாளில் உலகமெங்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வை மேற்கொள்ளப்படுகிறது.
〰️〰️〰️🧕👩🏻‍🦱👩‍🏫〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
சங்கம் காணாதது தமிழும் அல்ல
தன்னை அறியாதவள் தாயுமல்ல
என் வீட்டில் என்றும் சந்ரோதயம்
நான் கண்டேன் வெள்ளி நிலா
அழகிய கண்ணே உறவுகள் நீயே
சொர்க்கம் எப்போதும் நம் கையிலே
அதை நான் காண்கிறேன் உன் கண்ணிலே
என் நெஞ்சம் என்றும் கண்ணாடி தான்
என் தெய்வம் மாங்கல்யம் தான்
அழகிய கண்ணே உறவுகள் நீயே
மஞ்சள் என்றென்றும் நிலையானது
மழை வந்தாலுமே கலையாதது
நம் வீட்டில் என்றும் அலைமோதுது
என் நெஞ்சம் அலையாதது
அழகிய கண்ணே உறவுகள் நீயே
நீ எங்கே இனி நான் அங்கே
என் சேய் அல்ல தாய் நீ
அழகிய கண்ணே உறவுகள் நீயே
*படம்: உதிரிப்பூக்கள்*
குரல்: எஸ்.ஜானகி
இயக்கம்: ஜெ. மகேந்திரன்
தயாரிப்பு:
ராதா கிருஷ்ணன்
டிம்பிள் கிரியேஷன்ஸ்
இசை: இளையராஜா
நடிப்பு:
சரத்பாபு,
அஷ்வினி,
சுந்தர்,
விஜயன்.
ஒளிப்பதிவு: அசோக் குமார்
வெளியீடு: 19.10.1979.
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*பெண்* *குழந்தைகள் தின
வாழ்த்துகள்
!*
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment