Tuesday 19 October 2021

தூய எண்ணங்கள்.

 தூய எண்ணங்கள்.

வாழ்க்கையில் அழகு என்பது நாம் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளோம் என்பதில் இல்லை . நம் செயலால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது போய்ச் சேரும் இடம் அல்ல.அது ஒரு பயணம்.
மகிழ்ச்சி என்பது எதிர்காலம் அல்ல. அது நிகழ்காலம். ஏனெனில் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனம் தெளிவு அடைகிறது. மனம் தெளிவாக இருக்கும்போது உள்ளத்தில் புதுப் புது சிந்தனைகள், தூய எண்ணங்கள் ஊற்றெடுக்கிறது. மனம் மகிழ்ச்சியாக இருக்கும் போதுதான் ஒருவரின் செயல் திறன் அதிகமாகவும், ஆக்கப்பூர்வமாக இருக்கும். பொதுவாக மற்ற வர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகள் செய்யும்போது இயல்பாகவே உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்..
ஆம். நண்பர்களே
எந்தச் சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்கக் கற்றுக் கொண்டு விட்டால் துன்பங்களின் நிழல்கூட உங்களை அணுக முடியாது. மற்றவர்களை மகிழ வைத்து மகிழுங்கள். உலகம் உங்களைக் கண்டு மகிழும்.

No comments:

Post a Comment