Monday 25 October 2021

தமிழகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை இன்று திருச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது..

 தமிழகத்திலேயே மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை இன்று திருச்சியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது..

ஆஞ்சநேயருக்கு தமிழகத்தில் சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.அடுத்தபடியாக நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொது அதைவிட உயரமான ஆஞ்சநேயர் சிலை அதாவது 37அடி உயரத்தில் 'ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர்' அறக்கட்டளை சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அனுமன் தோப்பில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
37 அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன சிலையானது அதன் பீடத்தில் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்க, பக்தர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமன் என்ற கோஷங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் காணப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த கோயிலின் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment