Friday 15 October 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 15.10.2021 வெள்ளிக்கிழமை

 *கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
15.10.2021 வெள்ளிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🔊1932ல் டாட்டா ஏர்லைன்சு
விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி (ஏர் இந்தியா)
சேவையை ஆரம்பித்தது.
🔊திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஏ.பீம்சிங் பிறந்த தினம்-1924.
🔊இன்று இந்திய விடுதலைப் போராட்ட வீரர்
மருதநாயகம் நினைவு நாள்-1764.
🔊இன்று உலகக் கைகழுவும் நாள்
🔊இன்று இந்திய ஆன்மீக குரு சீரடி சாயிபாபா நினைவு நாள்-1918.
🔊இன்று திரைப்பட இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பா நினைவு நாள்-2004.
🔊இன்று இந்தியாவின் மேனாள்
குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்
பிறந்த தினம்-1931.
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இவர் இந்தியாவின்,11ஆவது
குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும், நிர்வாகியும் ஆவார்.
இவர் தமிழ்நாட்டில் உள்ள
இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில்
இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில்
விண்வெளி பொறியியலும் படித்தவர்.
〰️〰️〰️🛰️🚀🛩️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶 உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
உன்னை அறிந்தால்...
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
உன்னை அறிந்தால்...
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
உன்னை அறிந்தால்...
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
படம்: வேட்டைக்காரன்
குரல்: டி.எம்.எஸ்
இயக்கம்: எம்.ஏ.திருமுகம்
தயாரிப்பு: எம்.எம்.ஏ.சின்னப்ப தேவர்
தேவர் பிலிம்ஸ்
கதை: ஆரூர்தாஸ்
இசை: கே.வி.மகாதேவன்
நடிப்பு: எம்.ஜி.ஆர்,
சாவித்திரி
வெளியீடு: 14.01.1964
நீளம்: 4470 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment