Friday 29 October 2021

சுய சிந்தனை. தூக்கிப் போட்டு விடுங்கள்...

 சுய சிந்தனை.

தூக்கிப் போட்டு விடுங்கள்...
எதை என்றா கேட்கிறீர்கள்?
மனத்திலிருக்கும் குப்பையைத் தான் சொல்கிறேன்.
தேவையில்லாத இருளைச் சேரவிட்டால், தேவைப்படும் போது, வெளிச்சம் நமக்கு கிடைக்காமலேயே போய்விடும்.
கப்பலில் ஓட்டை விழுந்து விட்டால், முதலில் கனமான பொருட்களை தூக்கிப் போட்டு விடுவர்.
அது என்னவாக இருந்தாலும் சரி; கடலில் தூக்கி எறிந்து விடுவர். அப்போது தான், கனம் குறைந்து லேசாகி, கப்பலில் உள்ள மனித உயிர்கள் தப்பும்.
இதில், 10 சதவீத மனநிலையாவது, மனதில் குப்பை சேர்க்கிற பேர்வழிகளுக்கு வேண்டும். எந்த எண்ணங்கள் நமக்கு வேதனையையும், சோகங்களையும் எதிர்மறையாகவே நம்முள் ஏற்படுத்துகிறதோ, அதைத் தூக்கி கிடாசி விட வேண்டியது தானே.
தங்களைச் சுற்றியிருப்போர் மிகச் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கும் பலர், தங்களைப் பற்றிய சுய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றனர் என்பதே, கண் கூடான உண்மை. முதுகில் தட்டிக் கொடுத்து, எதையும் சாதிக்கலாம் என்று நம்புங்கள்.
முதுகில் குத்தி விட்டு எதையுமே சாதிக்க முடியாது என்பதையும் நம்புங்கள்.
வெறுப்பை வெறுப்பால் அணைக்க முடியாது தானே, அது போல தான், நட்பு, பழக்கம், உறவு இவற்றில் ஏற்படும் பிணக்குகளை அந்த பிணக்கை பிடித்துக் கொண்டேயிருப்பதால் தீர்க்க முடியாது.
மறக்க முயற்சி செய்வோம் அல்லது மன்னிக்கவாவது முயலுவோம். நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், இதில் ஏதாவது ஒன்றைச் செய்து தான் ஆக வேண்டும்

No comments:

Post a Comment