Monday 11 October 2021

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா.

 மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா.

10.10.2021 இன்று ஞாயிற்றுக் கிழமை
🌼🌿திருநீலகண்ட யாழ்பாணருக்கு தங்கப் பலகை கொடுத்த திருவிளையாடல்.
மதுரை அருள்மிகு ஶ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
🌼🌿🌼நவராத்திரி திருவிழா🌼🌿🌼
10.10.2021 ஞாயிற்றுக்கிழமை
நாங்காம் நாள் அன்னை ஶ்ரீமீனாட்சி
63 நாயன்மாரில் ஒருவரான திருநீலகண்ட யாழ்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்தல்
🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼
புராண வரலாறு 🎼 🎶 🎵 🎼🎹
திருவெருக்கத்தம்புலியூரிலே திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருப்புகழை யாழில் இட்டுப்பாடுவாராகி, சோழநாட்டில் உள்ள சிவஸ்தலங்களை வணங்கிக் கொண்டு சென்று, பாண்டிநாட்டிற் சேர்ந்து, மதுரையில் இருக்கின்ற சொக்கநாத சுவாமியினுடைய திருக்கோயில் வாயிலை அடைந்து நின்று, பரமசிவன் மேலனவாகிய பாணிகளை யாழில் இட்டு வாசித்தார். சொக்கநாத சுவாமி அதனைத் திருவுள்ளத்துக் கொண்டு அன்றிரவிலே தம்முடைய அடியார்களெல்லாருக்கும் சொப்பனத்திலே தோன்றி ஆஞ்ஞாபிக்க, அவர்கள் மற்றநாள் திருநீலகண்டப் பெரும்பாணரைச் சுவாமிக்குத் திருமுன்பே கொண்டுவந்தார்கள். திருநீலகண்டப் பெரும்பாணர் அது சுவாமியுடைய ஆஞ்ஞை என்று தெளிந்து, திருமுன்பே இருந்து யாழ் வாசித்தார். அப்பொழுது "இந்தப் பாணர் அன்பினோடு பாடுகின்ற யாழ் பூமியிலே உள்ள சீதம் (குளிர்ச்சி) தாக்கினால் வீக்கு அழியும். ஆதலால் இவருக்குப் பொற்பலகை இடுங்கள்' , என்று ஆகாயத்தினின்றும் ஓரசரீரிவாக்கு எழுந்தது. அதைக் கேட்ட அடியார்கள் பொற்பலகையை இட, திருநீலகண்டப் பெரும்பாணர் அதில் ஏறி, யாழ் வாசித்தார்.
🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼
.நன்றி கண. முத்தப்பன்
ஜேசி வேலு மீனாம்பாள் வேலு

No comments:

Post a Comment