Tuesday 19 October 2021

அறியாமை அகலட்டும்.

 அறியாமை அகலட்டும்.

1.சுதந்திரம் என்பது எல்லோரும் விரும்பும் ஒன்று..எனவே தன் காலில் நிற்க முயலுங்கள்.
மனப்பூர்வமாக முயன்றால் பல்வேறு துறைகளில் தன் காலில் நிற்க முடியும் என்பதை கண்டு கொள்வீர்கள்.
2.எப்பொழுதும் ஏதாவது நன்மை பயக்கும் வேலையைச் செய்யுங்க்ள்.
இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? என்று அலைந்து திரிவதில் நேரத்தை வீணாக்காதீர்கள்,இதனால் பயனற்ற மனப்போராட்டத்தில் நீங்கள் நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள் கூட வீணாக்கி கடைசியில் ஒன்றும் செய்யாமல் போய் விடுவீர்கள்.அதிகமாக திட்டங்களை தீட்ட வேண்டாம்.
3.சோதனைகளையும்,இடுக்கண்களையும் எதிர்நோக்காமல் எந்தத்துறையிலும் எதையும் சாதிக்க முடியாது.ஏதோ காலம் தான் கழியும்,
4.உங்களுடைய கடந்த கால அனுபவங்களில் இருந்து நீங்கள் கற்று கொள்ளுங்கள்,அந்தப்பாடங்களை கற்றுக்கொண்டு அதுவே எதிர்காலச் செயல்களுக்கு வழி காட்டியாக அமையட்டும்.நான் அப்படிசெய்திருந்தால் இப்படி ஆயிருப்பேனே,இப்படிச்செய்திருந்தால் ..... என்று எண்ணுவதெல்லாம் வீணான சிந்தனையாகும்.
5.உங்கள் தேவைகளை பெருக்கிக்கொள்ளாதீர்கள்,பிறகு பிச்சைக்காரனைப்போல் திரியாதீர்கள், உங்கள் தேவைகளை குறைத்துக்கொண்டு ராஜாவைப்போல் வாழுங்கள்.
6.வீட்டில் உங்களுக்குத் தேவையான உடைகள் இருக்கும் பொழுது எதற்காக ஒரு துணிக்கடைக்கும் நுழைந்து பல்வேறு ரகங்களைக் காண வேண்டும் ?இல்லையெனில் தேவையற்றதை வாங்குவீர்கள்,ஓ என்னிடம் இது இல்லையே !
இதை நான் வாங்கினால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?என்று மனம் வருந்த வேண்டியிருக்கும்.
7.எல்லாவிதமான தேவையற்ற பேச்சையும் தவிருங்கள்.அளந்தே பேசுங்கள்.
களங்கமற்ற நல்நோக்கம் கொண்ட வார்த்தைகளே சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு ,பிரிவை உண்டாக்குகிறது.
8.விவாதம் செய்யாதீர்கள்.நண்பர்களுக்கிடையே பிளவை உண்டாக்கும்.
9.எனக்கு என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றி எனக்கு கவலைஇல்லை ஆனால் பிறரைப்பற்றிதான் கவலை,என்று சிலர் சொல்லுவர்.இது அறியமையாகும்.
இவ்வாறு சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
10.இறுதியாக இந்த உலகம் முழுவதும் பொய்யானது என்பதை அனைவரும் உணரவேண்டும்.
11.பிறரை சந்தோஷப்படுத்துங்கள். அவர்களது மகிழ்ச்சியில் நீங்கள் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

No comments:

Post a Comment