Thursday 21 October 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள் 21.10.2021 வியாழக்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
21.10.2021 வியாழக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🔊1943ல் இன்று
சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த சென்று இந்திய அரசை அறிவித்தார்.
🔊இன்று தமிழ் நாடக, திரைப்பட நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்த தினம்-1937.
🔊இன்று உலக காவலர்கள் தினம்
காவல் துறையில் பணியில் இறந்தவர்கள் நினைவாக இந்நாளை
முதன் முதலில் 1866 நியூ யார்க்கில் துவக்க பட்டது.
காவல் துறை நண்பர்களே, காவல் துறை நினைவு இன்று நாடே உங்களை இணைவுக் கூறும் நாள் .
எனவே விபத்தில், பணியில் இறந்த காவல் ஆன்மாக்களுக்கு ஒரு சல்யுட் .
தமிழகத்தில் 2015ல் வெள்ளப் பெருக்கு, 2019 கரொனா தாக்கத்திலும் அவர்கள் காவற்துறை பணிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
ஒருசில காவலர் செய்யும் தவறுகளால் எல்லோரையும் தவறாக நாம் எண்ணக் கூடாது.
〰️〰️〰️👮‍♂️💂🏽‍♂️👮🏻‍♀️〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶 யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும்
பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி
பிழைக்க முடியல்லே
இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
நானி இருக்கும் இடத்தினிலே
அவன் இருக்கின்றான்
அவன் இருக்கும் இடத்தினிலே
நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார்
அதுவும் தெரியல்லே
இப்போ நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்
பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பி என்னத்தச் சொல்வேண்டா
தம்பி ஒருவன் வெளியில் நின்று
காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து
கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே
கலங்கி நிக்குதடா
அட உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு
வெளியில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பி என்னத்தச் சொல்வேண்டா
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
மூடருக்கும் மனிதர் போல
முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம்
நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும்
உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து
பாடிச் செல்லுமடா
அட என்னத்தச் சொல்வேண்டா
தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா
யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியல்லே
அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியல்லே பேதம் புரியல்லே
*படம்: பலே பாண்டியா*
குரல்: டி.எம்.எஸ்
இயக்கம்: பி.ஆர்.பந்துலு,
தயாரிப்பு: பி.ஆர்.பந்துலு
பத்மினி பிலிம்ஸ்
இசை: விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு:
சிவாஜி கணேசன்,
எம். ஆர். ராதா,
தேவிகா,
பாலாஜி.
வெளியீடு: 26.05.1962
படத்தின் நீளம்: 4449 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment