Friday 8 October 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள் 08.10.2021 வெள்ளிக்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
08.10.2021 வெள்ளிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🔊இன்று கவிஞர், பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்-1959.
🔊இன்று திரைப்பட் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் பி.ஆர்.பந்துலு
நினைவு தினம்-1974.
🔊இன்று
சுதந்திர போராட்டவாதி, இந்திய அரசியல்வாதி
ஜெயபிரகாஷ் நாராயண் நினைவு தினம்-1979.
🔊இன்று உலக முட்டை தினம்
🔊இன்று இந்திய வான்படை தினம்
1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
இந்திய விடுதலைக்கு பின் இந்தியப் பாதுகாப்பு படையின் ஒரு பிரிவானது.
இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களைக் கொண்டுள்ளதுஅதோடு சுமார் 1,130 போர்விமானங்களும் 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன.
இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாகத் திகழ்கிறது.
〰️〰️〰️✈️✈️✈️〰️〰️〰️
இந்திய வான்படை தினத்தில்
*கவியரசர் எழுதிய நாட்டுப் பற்றுப் பாடல் ஒன்று*
🎶 நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு?
பாடும் பொழுதெல்லாம் அதையே பாடு
மானம் பெரிதென்று வாழும் பண் பாடு
பாலைவனம் என்ற போதும் நம் நாடு
பாறை மலை கூட நம் எல்லைக் கோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்
வானம் குலமாந்தர் முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள் மனம் பார்த்ததில்லை
வீரர் விழிதாழ்ந்து நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது நடை போடும் எல்லை
பசி என்று வருவோர்க்கு விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்துப் புலியாகச் சீறும்
நிலத்தினில் உயிர் வைத்து உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை உரமாகப் போடும்
*திரைப்படம்: நாடோடி*
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயக்கம்: பி.ஆர்.பந்துலு
தயாரிப்பு: பி.ஆர்.பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
நாயகன்,நாயகி: எம். ஜி. ஆர்
சரோஜா தேவி
வெளியீடு: 14.04.1966
ஓட்டம்.நீளம்: 4698 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*அனைவருக்கும் நவராத்திரி* *திருநாள் நல்
வாழ்த்துகள்
*
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment