Friday 29 October 2021

பிறப்புக்கு தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே.

 பிறப்புக்கு தகப்பன் கொடுத்தது ஒரு துளி ரத்தம் மட்டுமே.

இவ்வளவு எலும்புகளும், நரம்புகளும், ரேகைகளும் எங்கிருந்து வந்தன?
மண்டையோட்டை அறுத்துப் பார்த்தால் உள்ளே ரோமம் இல்லை. இந்த ரோமம் வளர்வது எப்படி?
நாம் வளர்வது எப்படி?
குழந்தை பருவத்தில் விழுந்த பல் முளைப்பது எப்படி?
ஒன்பது ஓட்டைகள் இருந்தும் உள்ளே இருக்கும் காற்று உலாவிக் கொண்டே இருப்பது எப்படி?
இவை அறிவு போடும் கேள்விகள்.
ஆனால் அனுபவம் காட்டும் உண்மைகள், இவற்றை விட அதிகமாக கடவுள் நம்பிக்கையை உறுதி செய்கின்றன.
இறைவனின் அஸ்திவாரம் என்ன என்பதை முதலிலேயே கண்டு கொண்டவர்கள் இந்துக்கள்தான்.
இரக்கம், அன்பு, கருணையை காட்டிய பௌத்த மதம் கடவுள் ஒன்றை காட்டவில்லை.
ஆனால், கடவுள் என்று ஒன்றை காட்டிய இந்து மதம் இரக்கம், அன்பு, கருணையை விட்டுவிடவில்லை.
பௌத்த மதத்தை இந்து மதம் ஜீரணித்து விட்டதற்கு காரணம் இதுதான்.
ஆகவேதான் எந்த நிலையிலும் கடவுள் நம்பிக்கை எழுந்துகொண்டே இருக்கிறது ஒரு இந்துவுக்கு. அந்த நம்பிக்கை இல்லாதவனும், மேற்சொன்ன நிலைகளுக்கு தப்பமுடியாது.
"ஆஸ்தி" என்றால் சொத்து.
"நாஸ்தி" என்றால் பூஜ்ஜியம்.
"நாஸ்திகன்" ஒன்றுமில்லாத சூனியம்.
இந்து கடவுள் சூனியத்தில் தோன்றி, செல்வத்தில் பரிணமிக்கின்றான்.
ஆகவே, நாத்திகனும், இந்துவே: ஆஸ்திகனும் இந்துவே.
இரண்டு பேரும் கடவுளைப் பற்றியே பேசுகிறார்கள்.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதத்திலிருந்து" "ஏன் இந்த நம்பிக்கை"?
நன்றி கவியரசு கண்ணதாசன்



No comments:

Post a Comment