Friday 15 October 2021

சிறியது பெரியது என்று இல்லை.

 சிறியது பெரியது என்று இல்லை.

ஒரு தந்தையிடம் மகள் தனது மதிப்பெண் சான்றிதழைக் காட்டினார் தனது மதிப்பெண்களைப் பார்த்து தந்தை சந்தோசம் அடைவார் என்று நினைத்தாள் அவள்தேர்வில் 90% சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இருந்தாள்.
ஆனால் நடந்துவோ வேறு .சான்றிதழைப் பார்த்த தந்தை முகத்தில் சந்தோஷம் எழ இல்லை. அதனைப் பார்த்த மகள் தந்தையிடம் “அப்பா உனக்கு நான் பெற்ற மதிப்பெண்களில் சந்தோசம் இல்லையா?” என்று கேட்டாள்.
அவர் மகளின் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லவில்லை.
அதனைப்பார்த்த மகள் அப்பா நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பதை தள்ளிபோடுகிறீகள். அப்படி சந்தோஷமாக இருப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தால் என்றும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கவேமுடியாது. முதலில் நான் என் வகுப்பு பிரிவில் முதலாவதாக வந்திருக்கிறேனா இல்லையே என்பீர்கள்.
வகுப்பில் நான் தான் முதல் என்று சொன்னால் பள்ளியில் முதலாவதாக வந்திருக்கிறாயா என்பீர்கள்.
பள்ளியில் முதலாவது என்றுசொன்னால் மாவட்டத்தில் முதலாவதாக வந்திருக்கிறாயா என்று கேட்பீர்கள்
இப்படி மாவட்டத்தில் முதல் இடம் என்றால் மாநிலத்தில் முதல் இடமா என்பீர்கள். .* இப்படி நீங்கள் சந்தோசம் அடைவதை எதாவது காரணம் தேடி எப்போதும் சந்தோசம் அடைவதை தள்ளிப்போடுகிறீர்கள். இப்படியிருந்தால் நீங்கள் என்றும் எப்போதும் சந்தோஷமாக இருக்கவே முடியாது என்றார் .
எனவே மகிழ்ச்சி அடையற விஷயம் என்றால் உடனே மகிழ்ச்சி அடையுங்கள் .அந்த விஷயம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் மகிழ்ச்சி அடையுங்கள்,
சந்தோசம் அடைவதில் சிறியது பெரியது என்று ஏதும் இல்லை
அது ஒரு மன நிலை
கல்யாணம் ஆனா உடனே சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பிக்கணும் கொஞ்ச நாளுக்கு பிற்கு சந்தோஷமா இருக்கலாம் என்றால் என்றும் சந்தோஷமாக இருக்கவே முடியாது.
சில விஷங்கள் புரியாம இருக்கும் போதுதான் சந்தோசம் தரும். புரிஞ்ச பிறகு மகிழ்ச்சி காணம போயிடும்.
கடலில் அலை நின்ற பிறகு குளிக்கலாம் என்று காத்திருப்பதும் ஒன்று தான். அப்புறமாக சந்தோஷப்படலாம் என்று சந்தோஷத்தை ஒத்தி போடுவதும் ஒன்று தான்.
1

No comments:

Post a Comment