Monday 25 October 2021

சொன்னபடி வாழும் வாழ்க்கை .

 சொன்னபடி வாழும் வாழ்க்கை .

போதைகளில் மீளா கடும் போதை, எது தெரியுமா...? தற்புகழ்ச்சிதான்...
எவ்வளவு சிறந்தவர்களையும் படுகுழியில் தள்ளிவிடும் இந்தத் தற்புகழ்ச்சி...
பல நண்பர்கள் பேசும் பேச்சுகளிலே ‘நான்!, நான்!!, நான்!!!,’ ‘தான்’; மறந்தும் ‘நம்’, ‘நாங்கள்’, ‘எங்கள்’ என்று அவர்களின் வாய்களில் வரவே வராது...
கேட்பவர்கள் மனதிற்குள் அருவருப்பு அடைவார்களே என்ற எண்ணம்கூட இல்லாமல் இப்படி தங்கள் ‘தற்புராணத்தை கூறிக் கொண்டே இருப்பார்கள்...
கிரேக்க ஞானி சாக்கரட்டீசின் அறிவுத் திறனை அகிலமே பாராட்டுகிறது இன்று!, அவரோ எனக்குத் தெரிந்தது எல்லாம் என் அறியாமை ஒன்றுதான் என்றார்...! என்னே தன்னடக்கம்...!
உலகின் ஈடுஇணையற்ற நீதிநூலான திருக்குறளைப் படைத்த திருவள்ளுவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களில் ஓர் இடத்தில் கூட தன்னைப் பற்றித் தற்பெருமையாகப் பேசிக் கொண்டதில்லை...
வள்ளுவர் சொன்னவர் மட்டுமல்ல, சொன்னபடி வாழ்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது...
தன்னைக் காப்பது நோய் நொடிகளிலிருந்து மட்டும் அல்ல. நோய்களில் கொடிய நோயான தற்புகழ்ச்சியில் இருந்தும்தான்...
ஆம் நண்பர்களே
உங்களைப்பற்றி எப்போதும் பிறரிடம் பெருமையாகப் பேசுவதை தவிர்த்துவிடுங்கள், நான் தான் பெரியவர் என்று எப்போதும் நினைக்காதீர்கள். எனக்கு இவ்வளவு அதிகாரம் இருக்குனு எப்போதும் நினைக்காதீர்கள்.
அவசியமற்ற சூழலில் உங்களைப்பற்றி அடிக்கடி பெருமையாக மற்றவர்களிடம் பேசும்போது அது மற்றவர்களுக்குப் பயன்படாத தகவலாக மாறுகிறது. தற்பெருமையாகவும் வடிவெடுக்கிறது.
இல்லாததைப் பற்றி மனம் ஏங்கும்போது அவற்றைப் பெறுவதற்காக இல்லாத ஒன்றை இருப்பதுபோல காட்டிக்கொண்டு தற்பெருமை பேச வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
இதனைத் தவிர்க்க உங்களிடம் இருப்பவற்றில் நிறைவு காணும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
இதுபோன்ற பல வழிமுறைகளைப் பயன்படுத்தி ‘ஈகோ’ எனப்படும் ‘தற்பெருமை’யைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்யலாம்.
இதன்மூலம் நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் பெற்று நிறைவுடன் சிறப்பாக வாழலாம். அழிவைத்தரும் தற்பெருமை வேண்டாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு நல்ல செயலைச் செய்வோம்.

No comments:

Post a Comment