Monday 25 October 2021

வாழிய பல்லாண்டு.

 வாழிய பல்லாண்டு.

இன்று அகவை 65 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், மதுரை குவாலிட்டி கேர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர், எலும்பு அறுவைச் சிகிச்சை நிபுணர், மிக எளிய முறையில் மருத்துவ வழிகாட்டும் பண்பாளர், நெல்லை அரசு மருத்துவமனையின் மேனாள் முதல்வர்
டாக்டர் எல். டி. துளசிராம்
அவர்கள் நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட, ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி அருளுடன் வாழ்ந்திட வாழ்த்துகின்றேன்.
இவர்களின் தகப்பனார்
எல். என். துருவாசன் அவர்கள் மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர், எல் என். டி. கைடு மூலம் பல லட்சம் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் கற்றிட வழிகாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழிய பல்லாண்டு - மனிதத்தேனீ



No comments:

Post a Comment