Monday 23 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மார்ச் 31 வரை ஊரடங்கு வேண்டாம், பிழைப்பை பார்க்க வேண்டாமா ? வீட்டு செலவுக்கு பணம் வேண்டாமா ? என கேட்பவர்களை இத்தாலிய மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன். உங்களை போலதான் ஒரு இருபத்தைந்து நாள் முன்பு இத்தாலியர்கள் பேசிக் கொண்டார்கள். இதெல்லாம் சீனாவின் அழுக்குப்பிடித்த பகுதிகளில் மட்டுமே இருக்கும் வைரஸ், நான் எல்லாம் ஸ்டீல் பாடி, இங்கே அதிநவீன மருத்துமனைகள் இருக்கின்றன என்றெல்லாம் பேசினர். ஆனால் தற்போது முப்பது பேர் படுக்கவைக்கப்பட்டுள்ள ஒரு மருத்துவமனையில், நுரையீரல் முழுவதுமாக வைரஸால் அடைக்கப்பட்டு, ஒரே ஒரு மூச்சுக்காக துடிக்கிறார்கள். செயற்கை சுவாசம் வழங்கும் எக்மோ (extra-corporeal oxygenation) கருவிகள் வளர்ந்த நாடுகளிலேயே மிகக் குறைவு. இதில் முப்பது பேருக்கு ஐந்து கருவி என்றால் எப்படி இருக்கும் நிலை ?
இவருக்கு, அவருக்கு என மாற்றி மாற்றி கருவியை பொறுத்தி, ஓரிரு மூச்சிழுக்க வைக்கிறார்கள். யார் உயிர் வாழ வேண்டும், யாரை வேறு வழியில்லாமல் கைவிட வேண்டும் என்பது மருத்துவர்கள் முடிவெடுக்க வேண்டிய மிக சிக்கலான ஒரு விஷயம். "கருவியை கொடுங்கள் கொடுங்கள்" என கெஞ்சியவாறே பலர் உயிரிழப்பதை பார்த்து பார்த்து, மருத்துவர்கள் மனத்தளர்வுக்கு ஆளாகிறார்கள். சில மருத்துவர்கள் பணிச்சுமை தாங்காமல் மயங்கி விழுகிறார்கள். வளர்ந்த நாடான இத்தாலி, ஸ்பெயினிலேயே இப்படி ஒரு நிலை என்றால் இந்தியாவில் என்ன ஆகும் யோசித்துப் பாருங்கள்.
உண்மையில் எனக்கு ஸ்டீல் பாடி ஒன்றும் ஆகாது என்று வெளியில் திரிந்து இதை பரப்புபவரை நெற்றிபொட்டில் சுட்டு வீழ்த்த வேண்டும் போல் கோபம் வருகிறது.
கொரானாவை நாம் அழிக்க இயலாது. அதன் பரவலை தள்ளிப் போடலாம். அதன் மூலம் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைக்க செய்யலாம். அதற்கு நாம் யாரோடும் கலக்காமல் தனித்திருப்பதே சிறந்தது.
ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் வீட்டுப் பிள்ளைகளே உங்களுக்கு கொரானாவை கொண்டு வரலாம். இந்த நோய் பாதிக்கப்பட்ட பலர், எந்த அறிகுறியும் இன்றி நடமாடிக் கொண்டிருப்பார்கள் என்பதே இதன் பயங்கரம்.
ஆகையால் மார்ச் 31 வரை ஊரடங்கு இருக்க வேண்டும் என்பது ஒரு நிர்பந்தம். அதை மட்டும் செய்யாமல் விட்டால் இந்த நாட்டு மக்கள் சுருண்டு, சுருண்டு விழுந்து அழிவதை யாராலும் தடுக்க இயலாது. இன்று 300 பேர் வரை அது பரவி இருக்கிறது என்றால் வைரஸ் ஒரு மூவாயிரம் பேரிடம் அறிகுறி இல்லாமல் இருக்கிறது என்று கணிக்கலாம். இதை அடியேன் நிச்சயமாக யாரையும் அஞ்ச வைக்க சொல்லவில்லை. இதற்காக அடியேனை சிறையில் தள்ளினாலும் கவலை இல்லை. இந்த வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 31 வரை ஊரடங்கு மிக மிக மிக மிக மிக அவசியமானது. இதற்காக காவல்துறைக்கு மற்றும் பொதுமக்களுக்கு உதவக் கூடிய (போதிய பாதுகாப்பு கவசத்தோடு) தன்னார்வளர்களை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்.
உடனிருப்போம் இந்தியா அரசிடம். உதவுவோம் தமிழக அரசுக்கு.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

No comments:

Post a Comment