Monday 16 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கடிகாரத்தை பாருங்கள் ~
ஓடிக்கொண்டிருப்பது முள் மட்டுமல்ல... நம் வாழ்க்கையும் தான்..
ஒவ்வொருவரும் காலையில் எழுந்திருக்கும்போது அவர்களின் பைகளில் 24 மணி நேரம் நிரப்பப்படுகின்றது. அந்தக் *காலம், பொன் போன்றது.* நம்மை இயக்கிக்கொண்டிருப்பது காலம்தான். அந்தக் காலத்தின்மதிப்பைப் பலர் உணராமல் வீணடித்துக்கொண்டிருப்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
*༺🌷༻*
*‘காலத்தின் அருமையை உணருங்கள்.* கிடைக்கும் சந்தர்ப்பத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை வீணாக்குவது, சோம்பித் திரிவது, தள்ளிப்போடுவது போன்றவற்றை தவிர்க்கப் பழகுங்கள். இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப்போடாமல் இன்றே செய்து முடியுங்கள்’.
*༺🌷༻*
ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது திட்டமிட்டுச் செயல்படுபவர்கள் அதன் பலனை அடைய முடியும். மகரயாழ் எந்தவித திட்டமும் இல்லாமல் தொடங்கினால் குழப்பம்தான் மிஞ்சும். ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் காலம் என்பது இயற்கையால் அவருக்கு *வழங்கப்பட்ட வரம்.* காலத்தைச் சரியாக பயன்படுத்திகொள்வதில்தான் ஒருவரின் *உயர்வு, தாழ்வு* இருக்கிறது.
*༺🌷༻*
*காலம் பொன் போன்றது* என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் அனைவருமே சிறப்பான முன்னேற்றத்தைக் காணமுடியும் என்பதே உண்மை. ஒவ்வொரு வரும் பணத்தைத் திட்டமிட்டுச் செலவழிப்பதைப் போல *நேரத்தையும் திட்டமிட்டு செலவிடப் பழக வேண்டும்.* ஒருவகையில் பார்த்தால் *காலத்திலிருந்து விளைவதே நிதி.* காலத்தைச் சரியாக பயன்படுத்தினால்தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை நம்மில் பலர் உணரவில்லை.
*༺🌷༻*
*‘கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்*
*குத்தொக்க சீர்த்த இடத்து’*
என்ற வான்புகழ் வள்ளுவனின் குறள்படி, காலத்தை எதிர்பார்க்கவேண்டிய பருவத்தில் கொக்கைப் போல காத்து இருந்து, காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் கொத்துவதைப் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலும் ஒரு விதையே. #மகரயாழ் குறிப்பிட்ட காலத்தில் அதை விதைத்தால்தான் உரிய கால அவகாசத்தில் அது முளைத்துப் பயனை அளிக்கும்.
*༺🌷༻*
செயற்கரிய செயல்களை செய்தவர்கள் விதைத்த விதை விருட்சமாகி காலத்தையும் தாண்டி நிற்கிறது. நாம் முதலில் காலத்தின் அருமையை உணர்ந்து பயன்படுத்தப் பழக வேண்டும். *எண்ணங்களும், செயல் களும் உயரும்போது காலத்தையும் தாண்டி சாதனை படைக்க முடியும்.* அதை உணர்வோம், உற்சாகமாய் எழுவோம்.
*💐நன்றி🙏*
*💐கரை. செல்வன்*

No comments:

Post a Comment