Wednesday 11 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவர்கள் திருந்த போவதே இல்லை...
மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜ.வுக்கு 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். முதல்வர் வேட்பாளர் சிந்தியாவை நிறுத்த பல எம்எல்ஏக்களும் விரும்பினர். ஆனால், சீனியர் தலைவர் என்பதால் கமல்நாத்துக்கு மீண்டும் முதல்வர் பதவியை மேலிடம் அளித்தது.இதனால் சிந்தியா அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அவரின் ஆதரவாளர்களான 19 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 6 அமைச்சர்கள் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர்.
ஜோதிராதித்ய சிந்தியா விலகல் குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ், மாதவராவ் சிந்தியாவின் குடும்ப பின்னணியே துரோக பின்னணி தான். 1857-ம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தபோது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக சிந்தியாவின் மன்னர் குடும்பம் செயல்பட்டது. அதுபோலவே 1967-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியாவின் பாட்டி விஜயராஜே சிந்தியா காங்கிரஸில் இருந்து வெளியேறி ஜனசங்கத்தில் சேர்ந்தார். இதனை தான் ஜோதிராதித்ய சிந்தியாவும் செய்துள்ளார் எனக் கூறியுள்ளார்.
குறிப்பு;அரசியல் வாழ்க்கையை ஜனசங்கத்தில் தொடங்கிய மாதவ்ராவ் சிந்தியா பின்னாளில் காங்கிரஸில் வலிமை மிக்க தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். 2001-ல் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸில் இளம் தலைவரானார். காங்கிரஸ் தலைவராக ராகுல் பதவி வகித்த போது அவரது தளகர்த்தர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஜோதிராதித்யா சிந்தியா.
இவரது தந்தை மாதவ ராவ் சிந்தியா மறைவுக்குப் பிறகு 2002 பெப்ரவரியில் குணா தொகுதியில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 இல் மீண்டும் இத்தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்,பின்னர் 2007இல் தகவல்தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், 2009இல் வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராகப் பதவிவகித்தார். 2012இல் மின்சாரத் துறைக்கு தனிப்பொறுப்பு வகித்து இணையமைச்சரானார்.
இவர்களின் குடும்ப பின்னணியே துரோக பின்னணி என்றால்..?இத்தனை ஆண்டுகளாக,இவ்வளவு பதவிகளை அந்த குடும்பத்திற்கு காங்கிரஸ் கொடுத்தது ஏன்?காங்கிரஸ் கட்சியில் இருந்தால் மன்னர்; இல்லாவிட்டால் துரோகியா?காங்கிரஸ்காரர்கள் இப்படி பேசி பேசியே காங்கிரஸ் கட்சியையே ஒழித்து விட்டனர்.இவர்கள் திருந்த போவதே இல்லை.

No comments:

Post a Comment