Friday 20 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்ல நண்பன் ~
கவிஞர் கண்ணதாசன்*
நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
*༺🌷༻*
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும்.
ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது. மகரயாழ்
முகத்துக்கு நேரே சிரிப்பவன்,
முகஸ்துதி செய்பவன்,
கூனிக் குழைபவன்,
கூழைக் கும்பிடு போடுபவன்,
இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான்.
ஆனால் எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும்!
ஆகவே ஒருவனை நண் பனாக்கிக் கொள்ளுமுன், அவனைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
*༺🌷༻*
நண்பர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது ஒரு பழம்பாடல்.
பாடல் மறந்துபோய் விட்டது. விளக்கம் இதுதான்:
ஒன்று, *பனைமரம்* போன்ற நண்பர்கள்; இரண்டு, *தென்னைமரம்* போன்றவர்கள்; மூன்று, *வாழைமரம்* போன்றவர்கள்.
*༺🌷༻*
*பனைமரம்* யாராலும் நட்டுவைக்கப்பட்டதல்ல.
பனம்பழத்தைத் தேடி எடுத்து யாரும் புதைப்பதில்லை.
அது தானாகவே முளைக்கிறது.
தனக்குக் கிடைத்த தண்ணீரைக் குடித்துத் தானாகவே வளர்கிறது.
தனது உடம்பையும், ஓலையையும், நுங்கையும் அது உலகத்திற்குத் தருகிறது.
நம்மிடம் எந்த உதவியையும் எதிர்பாராமல், நமக்கு உதவுகிறவன், பனைமரம் போன்ற நண்பன்.
*༺🌷༻*
*தென்னைமரம்* நம்மால் நடப்படுகிறது.
அதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்றி வளர்த்தால்தான் அது நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல், நம்மிடம் அவ்வப்போது உதவி பெற்றுக் கொண்டு நண்பனாக இருக்கிறவன், #மகரயாழ் தென்னைமரத்துக்கு இணையான நண்பன்.
*༺🌷༻*
*வாழைமரமோ*, நாம் தினமும் தண்ணீர் ஊற்றிக் கவனித்தால்தான் நமக்குப் பலன் தருகிறது.
அதுபோல் தினமும் நம்மிடம் உதவி பெற்றுக் கொள்கிறவன் வாழைமரம் போன்ற நண்பன்.
*༺🌷༻*
இந்த மூவரில், பனைமரம் போன்ற நண்பனே நீ தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய நண்பன்.
*நன்றி🙏💐*
*~கவிஞர் கண்ணதாசன்*

No comments:

Post a Comment