Monday 16 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வணிக வளர்ச்சிக்கு
அண்ணல்
காந்தியடிகள் சொன்ன
ஆலோசனை
வாடிக்கையாளர் நமது
இடத்திற்கு வரும் மிக
முக்கியமானவர்
ஒரு கடை
வைத்திருப்பது
பொருட்களை விற்பனை
செய்வதற்காக.
கடைக்கு
வருகின்றவர்களின்
நோக்கம் பொருட்களை வாங்குவது; வேடிக்கை
பார்ப்பது அல்ல.
கடைக்கு வருபவர்களில்
சிலர்தான் வந்த உடனே
இந்த பொருள் வேண்டு
மென்று கூறி
விலையைக் கேட்டு
தேவைப் பொருளை
வாங்கிச் செல்வார்கள்.
ஆனால்
பெரும்பாலானவர்கள்
ஒரு பொருள் வாங்க
பல பொருட்களைப்
பார்ப்பார்கள். விலை,
தரம் பற்றி பல
கேள்விகள்
கேட்பார்கள்.
வாங்கலாம். இல்லை
பக்கத்துக் கடைகளைப்
பார்த்து விட்டு
வகுவதாகக் கூறிச்
செல்லலாம். இந்த
நிலையில்தான் விற்பனையாளர்.பொறுமை காப்பது
கடமையாகின்றது.
விற்பனையாளர் நடந்து
கொள்ளும் முறையில்
வாடிக்கையாளர்
திரும்பத் தேடி வர
வேண்டும்.கடைக்கு
வருகின்ற
நுகர்வோரை நமது
வாடிக்கையாளராக
மாற்றுவது தனிக்
கலை. இதற்கு
நிறையத் திறமை
வேண்டும்; பொறுமை
வேண்டும். அதற்கு
கடைக்கு யார்
வந்தாலும் அவர்
முக்கியமானவரென்று
கருதும் மனம்
வேண்டும்.
முக்கியமானவர் என்று
கருதி அவருக்குத்
தக்க மரியாதை
கொடுப்போம்.
சிறப்பாக
உபசரிப்போம்.
அன்போடு பேசுவோம்.
இது விற்பனையைக்
கூட்டும்
நன்றி மாதவ கிருஷ்ணன்

No comments:

Post a Comment