Thursday 12 March 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

’’அந்த ஆளு வந்தாலே இரவு முழுக்க விடிய,விடிய தலைவரிடம் பேசிக்கிட்டு இருப்பார்! அப்ப ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை டீ வேற கேட்பாங்க..என் தூக்கமெல்லாம் தொலைஞ்சுரும்...!’’
இது கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மையார் சொன்னது. 1996 ல் கலைஞர் முதல்வராக பதவியேற்ற போது அவருடன் முழுக்க ஒரு நாள் இருப்பது போன்ற ஒரு அசைண்ட்மெண்ட் குமுதத்திற்காக! இவ்வாறு அவர் குறிப்பிட்ட நபர் வேறு யாருமல்ல! சாட்சாத் திருநாவுக்கரசு தான்!
கலைஞர் ஒருவரை கட்சியில் சேர்ப்பதற்கு முன்னாள் அவர் கட்சிக்கு எந்த அளவு பயன்படுவார் என்பதை துல்லியமாகக் கணிப்பார்! மாறாக, வரக் கூடியவர் கட்சியை பயன்படுத்தி சென்றுவிடுவார் என உணர்ந்துவிட்டால்,சுவாரஸ்யமாகப் பேசி கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து, கழட்டிவிட்டுவிடுவார்!
திருநாவுக்கரசர் ரஜினி வீட்டிற்கு தன் ஒரு வயது பேரனின் பிறந்த நாளுக்கு வாழ்த்துப் பெற சென்றாராம்....!
ரஜினி என்ன குழந்தையின் தாய் வழி தாத்தாவா? அல்லது தந்தை வழி தாத்தாவா? இரண்டுமில்லை!உண்மையிலேயே நிஜ தாத்தாவான தன்னைவிட ரஜினியை அவர் மேம்பட்டவராக நினைக்கிறார் போலும்!
குழந்தையின் பிறந்த நாள் என்பது ஒரு சாக்கு! சொல்லப்பட்டது உண்மையாக இருக்கவாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்! அரசர் முன்கூட்டியே ரஜினி கட்சியில் துண்டு போட்டு வைக்கிறார் போலும்! இந்த சம்பவம் எனக்கு மேற்படி பழைய சம்பவத்தை நினைவுகூற வைத்துவிட்டது! சும்மா சொல்லிவைக்கிறேன்!

No comments:

Post a Comment